ஆபரேஷன் செய்து தான் அழகானேனா... இம்புட்டு கவர்ச்சிக்கு காரணம் என்ன? பியூட்டி சீக்ரெட்டை வெளியிட்ட ஹனி ரோஸ்

First Published | Jul 26, 2023, 10:47 AM IST

நடிகை ஹனி ரோஸ் அழகாக இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்த உண்மையை அவரே கூறி உள்ளார்.

Honey Rose

கேரளாவை சேர்ந்தவர் ஹனி ரோஸ். இவர் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான பாய் பிரண்ட் என்கிற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து 2007-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த ஹனிரோஸ் முதன்முதலில் நடித்த திரைப்படம் முதல் கனவே. இதையடுத்து சிங்கம்புலி படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். எப்படியாவது அடுத்த நயன்தாரா ஆகிவிட வேண்டும் என்கிற கனவோடு வந்த ஹனிரோஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Honey Rose

பின்னர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்தார். சமீபத்தில் கூட அவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்திருந்தார். பாலகிருஷ்ணாவின் மகள் வயது இருக்கும் ஹனிரோஸ் இப்படத்தில் அவரின் தாயாக நடித்திருந்தது தான் ஹைலைட்டே. இதற்காக ட்ரோல்களையும் சந்தித்தார் ஹனி ரோஸ். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார் ஹனிரோஸ்.

இதையும் படியுங்கள்... உலகின் 5-வது பெரிய வைரமா... யார் சொன்னது? டம்மி பாவா அது! உண்மையை போட்டுடைத்த தமன்னா

Tap to resize

Honey Rose

சினிமாவில் நடித்து பேமஸ் ஆனதை விட இவரை பேமஸ் ஆக்கியது இவரது கவர்ச்சி தான். சமீபகாலமாக இவர் அதிகளவில் கடை திறப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அங்கு கவர்ச்சியான உடையணிந்து வரும் ஹனி ரோஸை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே வருவதால், அவருக்கு சினிமாவை விட இதன்மூலம் அதிகளவிம் பாப்புலாரிட்டி கிடைத்துள்ளது.

Honey Rose

இது ஒருபுறம் இருக்க நடிகை ஹனிரோஸ் தன்னுடைய இடுப்பு பகுதியை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள ஹனிரோஸ் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: இது கடவுள் தந்த அழகு, இதற்காக நான் எந்தவித அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை. என் உடலை அழகாக பராமரிக்க சில பவுடர்களை மற்றும் எடுத்துக் கொள்கிறேன்” எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஹனி ரோஸ்.

இதையும் படியுங்கள்... குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது... நடுரோட்டில் சிவாங்கியை மடக்கிப்பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த கூல் சுரேஷ்

Latest Videos

click me!