சமந்தா, ராஷ்மிகா கிடையாது.. கோடிகளில் புரளும் நம்பர் 1 நடிகை யார் தெரியுமா?

Published : Aug 08, 2025, 09:39 AM IST

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இந்த பட்டியலில் எந்த நடிகை முதலிடம் பிடித்துள்ளார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

PREV
17
தென்னிந்திய நடிகைகள் சம்பள பட்டியல்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, திரையுலகில் பல வெற்றி படங்களை தந்துள்ளார். 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2 நந்தி விருதுகள், ஒரு தமிழ்நாடு அரசு விருது உட்பட பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். IMDb இணையதளத்தின் தகவலின்படி, ஒரு திரைப்படத்திற்கு ரூ.3 கோடி முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

27
தமன்னா

தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் தனக்கென இடம்பிடித்துள்ள தமன்னா, இன்று தென்னிந்தியாவின் உயர்ந்த சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். 89 படங்களில் நடித்துள்ள தமன்னா, ஒரு படத்திற்கு ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை வாங்குவதாக GQ India தெரிவித்துள்ளது.

37
அனுஷ்கா ஷெட்டி

‘பாகுபலி’ புகழ் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு, தமிழக அரசு 2010ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. தற்போது அனுஷ்கா காதி திரைப்படத்தில் நடித்து வருகிறார். IMDb தகவலின்படி, ஒரு படத்திற்கு ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

47
த்ரிஷா

20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், தெலுங்கு திரையுலகில் ராணியாக விளங்கும் த்ரிஷா, தற்போது ரூ.10-12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ‘விஸ்வம்பரா’ படத்துக்காக மட்டும் ரூ.12 கோடி வரை வாங்கியதாக எகனாமிக் டைம்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

57
நயன்தாரா

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா, தற்போது இந்தியாவின் உயர்ந்த சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். 2018-இல் Forbes India Celebrity 100 பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய நடிகையாக இருந்தார். ரூ.3 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

67
ராஷ்மிகா மந்தனா

‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீவள்ளியாக மனதை கொள்ளை கொண்ட ராஷ்மிகா மந்தனா, தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமானார் நடிகையாக வளர்ந்துள்ளார். தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார். புஷ்பா 2க்கு ரூ.10 கோடி, ‘சாவா’க்கு ரூ.4 கோடி மற்றும் சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்துக்கு ரூ.13 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

77
சாய் பல்லவி

தெலுங்கு திரைப்படமான ‘தண்டேல்’ படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்த சாய் பல்லவி, தற்போது மிகவும் உயர்ந்த சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருகிறார். ஒரு படத்துக்கு ரூ.3-15 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ரன்பீர் கபூர் நடிக்கும் ராமாயணா படத்தில் ஒவ்வொரு பாகத்திற்கும் ரூ.6 கோடி சம்பளமாக வாங்குகிறார். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் சாய் பல்லவி முதலிடத்தில் உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories