பழம்பெரும் பாலிவுட் நடிகரான அருண் பாலி காலமானார். அவருக்கு வயது 79. myasthenia gravis என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அருண் பாலி, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அருண் பாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் மற்றும் ஷாருக்கானின் ராம் ஜானே ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார் அருண் பாலி.
இதுதவிர இந்தி சீரியல்களிலும் நடித்து பாப்புலர் ஆன இவர் படங்களையும் தயாரித்து உள்ளார். இவர் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் வாங்கி உள்ளார்.
கமல் நடித்து, இயக்கிய ஹே ராம் படத்திலும் அருண் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் பெங்கால் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார். அருண் பாலியின் இறுதிச்சடங்கும் மும்பையில் நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.