Hema Malini News: தர்மேந்திராவுடன் வாழவில்லை..! முதல் முறையாக பிரிவு குறித்து மௌனம் களைத்த ஹேமமாலினி!

First Published | Jul 12, 2023, 9:39 PM IST

மூத்த நடிகரும், காதல் கணவருமான தர்மேந்திராவுடனான தனது உறவு குறித்தும்... அவருடன் வாழாததற்கு என்ன காரணம் என்பது பற்றியும் முதல் முறையாக கூறியுள்ளார் நடிகை ஹேமமாலினி.
 

பழம்பெரும் பாலிவுட் நடிகையான ஹேமமாலினி, நடிகர் தர்மேந்திராவை காதலித்து 1980 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர். ஹேமமாலினியை திருமணம் செய்து கொள்ளும் போது, தர்மேந்திராவுக்கு திருமணமாகி 4 குழந்திகள் இருந்தனர். தர்மேந்திரா 1954 ஆம் ஆண்டு பர்காஷ் கவுர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னுடன் நடித்த ஹேமமாலினி மீது காதல் வயப்பட்டார். மேலும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.
 

தர்மேந்திராவின் இரண்டாவது திருமணத்திற்கு, முதல் மனைவி பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், தர்மேந்திராவும் ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்ட பின்னர் முதல் மனைவி மற்றும் அவரின் குழந்தைகளான சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா மற்றும் அஜிதா ஆகியோரை விட்டு பிரிய நினைக்கவிலை. இரண்டு மனைவிகளுடனும் வாழ்ந்து வந்தார்.

விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ் மழையில் சமந்தா! 'குஷி' படத்திலிருந்து வெளியான ஆராத்யா லிரிக்கல் பாடல்!
 

Tap to resize

மேலும் தர்மேந்திரா மூலம் ஹேமமாலினிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 1981 ஆம் ஆண்டு இஷாவும், 1985 ஆம் ஆண்டு அஹானாவும் பிறந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய கணவர் தர்மேந்திராவுடனான உறவு குறித்தும், அவரிடம் இருந்து விலகி இருப்பது பற்றியும் முதல் முறையாக பேசியுள்ளார்.
 

"யாரும் அப்படி இருக்க விரும்பவில்லை,  தானாக, எது நடந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் வாழ்க்கையை இப்படி வாழ வேண்டும் என்று யாருக்கும் தோன்றாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதாரண குடும்பம், கணவனை தான் விரும்புகிறாள்... என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அதே போல் எது எனக்கு கிடைக்க வேண்டுமோ அதுவே எனக்கு கிடைத்தது. நான் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என ஹேமா தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi 50: விஜய் சேதுபதி நடிக்கும் 50-ஆவது படம் 'மகாராஜா'! டைட்டில் லுக் வெளியானது!
 

தனது நேர்காணலின் கடைசிப் பகுதியில் ஹேமா மாலினி கூறும்போது, ​​“தர்மேந்திரா எப்போதும் இஷாவுக்கும் அஹானாவுக்கும் சிறந்த அப்பாவாக இருந்திருக்கிறார். இது எங்களுக்கு மிக முக்கியமான மற்றும் சிறந்த விஷயம் என கூறுவோம்.  ஒரு தந்தையாக, தர்மேந்திரா எப்போதும் தனது மகளின் திருமணத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். இரண்டு பெண்களுக்கும் நல்ல துணை கிடைக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது என பேசியுள்ளார்.
 

தர்மேந்திராவுடன் ஹேமமாலினி இணைந்து வாழவில்லை என்றாலும் இருவரும், தற்போது வரை விவாகரத்து செய்து பிரியவும் இல்லை. மேலும் தர்மேந்திரா முதல் மனைவி பர்காஷ் கவுர் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுநாள் வரை ஹேமமாலினி தர்மேந்திராவுடன் வாழவில்லை என பல தகவல்கள்  வெளியான போது, பிரிவு குறித்து வாய் திறக்காமல் இருந்த இவர் முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விஷயம் மிகவும் பாதித்தது! 'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த ஆதிரை கூறிய ஷாக்கிங் தகவல்!
 

Latest Videos

click me!