முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனியின் மனைவி சாக்ஷி தயாரிப்பில் நேற்று வெளியான 'எல்.ஜி.எம்' திரைப்படத்தை, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளது மட்டும் இன்றி இந்த படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், 'லவ் டுடே' பட நாயகி இவானா ஹீரோயினாக நடித்துள்ளார். அதேபோல் நடிகை நதியா இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நடித்துள்ளார்.
படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தோனியின் முதல் தயாரிப்பில் வெளியாவதால் இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதற்கு ஏற்ற போல் இந்த படத்தின் முன்பதிவு டிக்கெட் மட்டுமே சுமார் 45 லட்சத்திற்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
வசூலில் மாஸ் காட்டும் சந்தானம்! DD ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு தெரியுமா?
சாக்ஷி கூறிய சுவாரஸ்யமான ஒன் லைனை வைத்து இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். சாக்ஷியின் ஐடியா புதுமையாக இருந்தாலும், திரைக்கதை மிகவும் வீக்காக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இருவரும் அக்ரீமெண்ட் போட்டு காதலித்து வர, பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். தன்னுடைய மகனுக்கு திருமணமாக வேண்டும் என கோவில் கோவிலாக சுற்றி வரும் நதியாவுக்கு மகன் காதலிப்பதாக கூறுவதால் மகிழ்ச்சி அடைகிறார். உடனடியாக இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவே பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது.
அப்படி செல்லும்போது இவானா, நதியாவை புரிந்து கொண்டாரா? பின்னர் என்ன பிரச்சனை ஏற்படுகிறது என... கதைக்காக சில காட்சிகளையும், காமெடியையும் திணித்து கூறியுள்ளார் ரமேஷ் தமிழ்மணி. தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம், முதல் நாளில் 1.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.