Published : Mar 03, 2025, 11:11 AM ISTUpdated : Mar 03, 2025, 11:18 AM IST
ஆஸ்கார் 2025 விழா மேடையில், ஹாலி பெர்ரி, ஏட்ரியன் ப்ராடியிடம் 2003-ல் பெற்ற முத்தத்தை மீண்டும் கொடுத்தார். இதுகுறித்த வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
திரையுலகினரும் வழங்கப்படும், மிக உயரிய விருதான 97-வது அகாடமி விருது இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏட்ரியன் ப்ராடி மற்றும் ஹாலி பெர்ரி இருவரும், முத்த மழை பொழுந்து ரசிகர்களை பழைய நினைவுகளில் மூழ்கடித்தனர்.
25
ஹாலி பெர்ரி, ப்ராடியை சந்தித்து முத்தமிட்டார்
விழா தொடங்கும் முன் ஹாலி பெர்ரி, ப்ராடியை சந்தித்து முத்தமிட்டார். இந்த காட்சி கேமராவில் பதிவாகி வைரலானது. இந்த சம்பவம் 2003-ல் நடந்த ஆஸ்கார் விழாவில் இருவரும் மேடையில் பகிர்ந்த முத்தத்தை நினைவுபடுத்தும் விதத்தில் உள்ளது.
35
ஆஸ்கார் மரபின்படி முத்தமிட வேண்டும்
அதாவது 2003-ல் ரோமன் போலன்ஸ்கியின் "தி பியானிஸ்ட்" படத்துக்காக ஆஸ்கார் விருதை ஹாலி பெர்ரி பெரும் போது ப்ராடி, அவரை முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆஸ்கார் மரபின்படி, முந்தைய ஆண்டுகளில் விருது பெரும் நடிகர் - நடிகைகளுக்கு முத்தமிடும் போது, மீண்டும் முத்தமிட்ட நடிகர் - நடிகைகள் விருதை வெல்லும்போது அவர்கள் மீண்டும் முத்தமிட வேண்டும் என்பது ஒரு பழக்கம்.
45
22 வருடம் காத்திருந்து தற்போது ஹாலி முத்தமிட்டார்
அந்த வகையில், 2002-ல் "மான்ஸ்டர்'ஸ் பால்" படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்று பெர்ரி வரலாறு படைத்தார். அந்த விருதை வென்ற முதல் கருப்பு நடிகை இவர்தான். ஆஸ்கர் விருதை பெற, சென்ற ஹாலி பெர்ரிக்கு, ஏட்ரியன் ப்ராடி முத்தமிட்டது மிகவும் பிரபலமானது. இந்த முத்தத்தை 22 வருடம் காத்திருந்து தற்போது ஹாலி கொடுத்துளளார்.
55
ஏட்ரியன் ப்ராடியின் நக்கல்
ஏட்ரியன் ப்ராடி விழா மேடையில் கொஞ்சம் நக்கலாக "இது பரிசுப் பையில் இதுவும் இருக்கும் என்று அவர்கள் சொல்லவில்லை," என்று உதடுகளைத் துடைத்த பெர்ரியிடம் கூறி, ஒட்டுமொத்த அரங்கையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த ஆண்டு, பிராடி கார்பெட்டின் 'தி ப்ரூடலிஸ்ட்' படத்தில் ஹங்கேரிய-யூத கட்டிடக் கலைஞர் லாஸ்லோ டோத் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இந்த விருதை பெற்றுள்ளார்.