ஆஸ்காரில் ஜீரோவான இந்தியா; அதிக விருதுகளை வென்று கெத்து காட்டிய படங்கள் என்னென்ன?

Published : Mar 03, 2025, 10:35 AM IST

ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ஒரே லைவ் ஆக்‌ஷன் குறும்படமான அனுஜா விருது வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டு உள்ளது.

PREV
15
ஆஸ்காரில் ஜீரோவான இந்தியா; அதிக விருதுகளை வென்று கெத்து காட்டிய படங்கள் என்னென்ன?

பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் டெல்லியில் எடுக்கப்பட்ட 'அனுஜா' குறும்படம், ஆஸ்கார்ஸ் 2025-ல் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை டச்சு மொழி திரைப்படமான 'ஐ'ம் நாட் எ ரோபோ'விடம் இழந்தது. ஆடம் ஜே. கிரேவ்ஸ் இயக்கிய 'அனுஜா', அனுஜா என்ற ஒன்பது வயது சிறுமியைப் பற்றியது. 

25
Anuja

படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, இந்த படம் குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் கூறுகையில் "இந்த அழகான படம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் ஒரு விஷயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அனுஜா ஒரு உருக்கமான, சிந்தனையைத் தூண்டும் படைப்பு. இது நாம் எடுக்கும் முடிவுகளின் சக்தியையும், அவை நம் வாழ்க்கையின் போக்கை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதையும் ஆழமாக பிரதிபலிக்க வைக்கிறது. இத்தகைய அற்புதமான படைப்பை உருவாக்கியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... Oscars 2025: 97வது ஆஸ்கார் விருதுகளை தட்டி தூக்கியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட்!!

35
Anora Movie Team

இந்த ஆண்டு ஆஸ்கார் விருது விழாவில் அனோரா திரைப்படம் தான் அதிக விருதுகளை வென்றுள்ளது. அப்படம் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மிகே மேடிசன்), சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய ஐந்து பிரிவுகளில் அனோரா படத்துக்கு விருது கிடைத்தது.

45
The Brutalist

அடுத்ததாக தி புரூட்டலிஸ்ட் திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது. அப்படத்தில் நடித்த அட்ரியன் ப்ராடி சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதும் இப்படத்திற்கு இசையமைத்த டேனியல் பிளம்பெர்க், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த லால் கிராலே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.

55
Dune 2

மூன்று படங்களுக்கு 2 ஆஸ்கர் விருது கிடைத்துள்ளன. அதன்படி விக்கிட் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பு (பால் டேஸ்வெல்) மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய விருது கிடைத்தது. அதேபோல் டூன் 2 படத்துக்கு சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த விஎஃப்எக்ஸ் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைத்தது. மேலும் எமிலியா பெரெஸ் படத்துக்கு சிறந்த துணை நடிகை (ஜோ சல்டானா) மற்றும் சிறந்த அசல் பாடல் ஆகிய விருதுகள் கிடைத்தன.

இதையும் படியுங்கள்... ஆஸ்கார் விருதை வென்ற முதல் கறுப்பின மனிதர்; வரலாறு படைத்தார் பால் டாஸ்வெல்!

click me!

Recommended Stories