வெயில் துவங்கி யானை வரை.. தேசிய விருது நாயகன் ஜிவி பிரகாஷின் இசை பயணம்

First Published Sep 30, 2022, 8:55 PM IST

சூரரை  போற்று படம் இன்று தேசிய விருதை பெற்றுள்ளது. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை  ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார்.

GV Prakash

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் உறவினர் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ். இவர் முதன் முதலில் இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் படத்தில் பாடகராக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்திற்கு அவரது தாய் வழி மாமா ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். மாமாவின் உதவியுடன் காலடி எடுத்து வைத்த ஜி வி பிரகாஷ் அந்நியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களில் பாடகராக பணியாற்றியுள்ளார்.

G.V.Prakash Kumar

பின்னர் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தில் இவருக்கு இசை அமைப்பாளருக்கான வாய்ப்பு கிடைத்தது.  முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைய  பின்னர் விஜயின் மதராசபட்டினம் இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம் படத்தை பாடி அசத்தி இருந்தார். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன், தேசிய விருது பெற்ற ஆடுகளம், மயக்கமென்ன உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தார். தொடர்ந்து வெற்றி படங்களில் பணிபுரிந்த ஜிவி பிரகாஷ் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு...இரண்டாவது குழந்தைக்கு தயாரான ஐஸ்வர்யா ராய் ?.. இதற்கு காரணம் இந்த உடை தான்...

ரஜினிகாந்தின் குசேலன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், சகுனி, பரதேசி, தலைவா, நிமிர்ந்து நில், சைவம், காக்கா முட்டை, விசாரணை, தெறி, குப்பத்து ராஜா, அசுரன், சூரரைப் போற்று, மாறன், ஐயங்கரன் சமீபத்தில் வெளியான யானை என தொடர்ந்து முன்னணி ஹீரோகளுக்கு இசையமைத்தார். கம்போஸராக ஜெயித்துவிட்டாலும் நடிப்பின் மீது அவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக குசேலன் படத்தில் காமியோ ரோலில் தோன்றியிருந்தார். 

பிரியா பவானி சங்கர் சமீபத்திய சூப்பர் கூல் போட்டோஸ்...

G.V.Prakash Kumar

பின்னர் டார்லிங் படம் மூலம் நாயகனாக உருவெடுத்தார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. இதை தொடர்ந்து நடிப்பில் அதிக கவனம் செலுத்த துவங்கிய ஜிவி பிரகாஷ் ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கையை, த்ரிஷா இல்லனா நயன்தாரா, எழுதுகோல் எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்காரு குமாரு, புரூஸ் லீ, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், நாச்சியார், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை, 100 சதவீதம் காதல், வணக்கம் டா மாப்பிள்ளை, பேச்சுலர்,  ஜெயில், ஐயங்கரன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக தோன்றியிருந்தார். தற்போது பொறிநகரம், இடிமுழக்கம் 13 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

G.V.Prakash Kumar

அடல்ட் கதைகளை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து இளம் ரசிகர்களை வசீகரித்து வருகிறார் ஜீ வி பிரகாஷ். இருந்தும் இசை அமைப்பாளருக்கு கிடைத்த அங்கீகாரம் நடிகராக இவருக்கு கிடைக்கவில்லை என்று கூறலாம். வளரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் வெளியான சூரரை  போற்று படம் இன்று தேசிய விருதை பெற்றுள்ளது. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை  ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார்.  இவருக்கு  பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழையை புரிந்து வருகின்றனர்.

click me!