தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். வெயில் படத்தில் தொடங்கிய இவரின் இசைப் பயணம் 19 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இடையே நடிகராக அதிக படங்களில் நடித்ததால் இசைக்கு பிரேக் விட்டிருந்த ஜிவி பிரகாஷ் தற்போது மீண்டும் இசையமைப்பில் பிசியாகி இருக்கிறார். அவர் கைவசம் சூர்யா 46, பராசக்தி, வாடிவாசல் போன்ற பிரம்மாண்ட படங்கள் உள்ளன. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே அவர் இசையமைத்த அண்டர்ரேட்டட் பாடல்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
ஆனந்த தாண்டவம் பட பாடல்
தமன்னா நடித்த ஆனந்த தாண்டவம் திரைப்படத்தில், ‘கல்லில் ஆடும் தீவே, சிறு கலகக்கார பூவே’ என்கிற பாடல் இடம்பெற்று இருக்கும். இந்த பாடல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தவில்லை. ஆனால் அப்படத்தின் இசை ஆல்பத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கும். வைரமுத்து இப்பாடலுக்கு பாடல் வரிகளை எழுதி இருப்பார். பென்னி தயால் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடி இருந்தனர். இந்த பாடலில் ஜிவி பயன்படுத்திய புல்லாங்குழல் இசை மிகவும் அருமையாக இருக்கும்.
35
ஓரம்போ தீம் பாடல்
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த படம் ஓரம்போ. ஆட்டோ ரேஸை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்திருந்தனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து இருந்தார். இதில் ஒரு தீம் சாங் இருக்கும். அந்தப் பாடலை பிளாசி பாடி இருந்தார். இப்பாடலுக்கு தியாகராஜன் குமாரராஜா பாடல் வரிகளை எழுதி இருந்தார். ஒரு ராப் ஸ்டைலில் இந்த தீம் பாடலை உருவாக்கி இருப்பார் ஜிவி. ஆட்டோவில் இருக்கும் மீட்டர் சத்தத்தையெல்லாம் இந்த தீம் பாடலில் பயன்படுத்தி இருப்பார் ஜிவி.
சிம்பு நடிப்பில் வெளியான மாஸ் திரைப்படம் காளை. இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்பாடத்தில் குட்டி பிசாசே என்கிற குத்துப் பாடல் மிகவும் பேமஸ் ஆனது. ஆனால் அதே அளவுக்கு பெப்பியான ஒரு பாட்டு அப்படத்தில் இருக்கும். அதுதான் குத்தாலக்கடி பாடல். இந்த பாடலுக்கு வாலிபக் கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதி இருந்தார். இந்த பாடலின் கடைசி 40 செகண்டுக்கு ஜிவி பிரகாஷ் ஒரு ட்ரம்ஸ் பீட் பயன்படுத்தி இருப்பார். அதற்கு சிம்புவும் சிங்கிள் ஷாட்டில் ஆடி இருப்பார்.
55
ஜிவி பிரகாஷுக்கே மிகவும் பிடித்த அண்டர்ரேட்டட் பாடல்
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷே தன்னுடைய இசையில் இதுதான் அண்டர்ரேட்டட் பாடல் என்று சொல்லி இருக்கிறார். அந்த பாடல் தான் அங்காடித் தெரு படத்தில் இடம்பெற்ற ‘கதைகளை பேசும் விழி அருகே’ பாட்டு. அந்த பாடலுக்கு நா முத்துக்குமார் தான் பாடல் வரிகளை எழுதி இருப்பார். இப்பாடலை ஹம்சிகா ஐயர் மற்றும் பென்னி தயால் இணைந்து பாடி இருப்பார்கள். இது தனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்டர்ரேட்டட் பாட்டு என ஜிவி கூறி இருக்கிறார்.