5 கோடி இழப்பீடு கேட்ட இளையராஜா - 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளரின் நச் பதிலடி!

Published : Apr 17, 2025, 01:34 PM IST

'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜா இசையில் உருவான 3 பாடல்கள் இடம் பெற்ற நிலையில், அனுமதி இன்றி தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இதற்கு தயாரிப்பாளர் நச் பதிலடி கொடுத்துள்ளார்.  

PREV
14
5 கோடி இழப்பீடு கேட்ட இளையராஜா - 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளரின் நச் பதிலடி!

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம்:

அஜித் நடிப்பில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் 'குட் பேட் அக்லி'. வெற்றிகரமாக ஒரு வாரத்தை எட்டி உள்ள இந்த திரைப்படம், தற்போது வரை திரையரங்கில் நல்ல வசூலை பெற்று வருகிறது. தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரசிகர்களின் கூட்டமும் திரையரங்கில் அலை மோதி வருகிறது.

24
Ilaiyaraaja Sent to Notice:

இளையராஜா தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் 

இந்நிலையில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில், சுமார் 9 பழைய படங்களின் சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பயன்படுத்தி இருந்தார். இந்த பாடல்கள் அனைத்தும் திரைப்படத்துடன் ஒன்றிணைந்து வருவதால், ரசிகர்களும் தற்போது வரை இந்த பாடல்களை கேட்டு ரசித்து வருகின்றனர். 

34
Music Director Ilayaraja Songs

இளையராஜா தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ்:

மேலும் இப்படத்தில் இளையராஜா இசையில் உருவான என் ஜோடி மஞ்ச குருவி, ஓத்த ரூபாய் தாரான்,  உள்ளிட்ட மூன்று பாடல்கள் பயன்படுத்தி இருந்ததாக கூறி, இளையராஜா தரப்பில் இருந்து ஐந்து கோடியை நஷ்ட ஈடு கேட்டு, படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸில், "பாடல்களை அப்படியே பயன்படுத்தாமல்  உருமாற்றம் செய்து பயன்படுத்தியுள்ளது, படைப்பாளரின் படைப்பை கேலி செய்தும் விதத்தில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனவே...  படத்தில் இருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்றும், எவ்வித பாரபச்சமும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கூறப்பட்டது. மீறும் பச்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறி இருந்தார்.

44
Ravishankar Replay to Ilaiyaraaja:

உரிய அனுமதி பெற்றே பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது:

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தயாரிப்பாளர் ரவிசங்கர் இந்த சர்ச்சைக்கு பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றி உள்ளோம். பாடல்களுடன் தொடர்புடைய இசை நிறுவனங்களிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம். அவர்களுக்கு பணம் கொடுத்து தடையில்லா சான்றும் பெற்றுள்ளோம். இதுவரை இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. அவர் மீது எங்களுக்கு நிறைய மரியாதை இருக்கிறது. நோட்டீஸ் கிடைத்ததும் சட்டரீதியாக அதை சந்திப்போம் என பதிலடி கொடுத்துள்ளார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories