போதையில் நடிகையிடம் அத்துமீறல்; போலீஸை பார்த்ததும் தலைதெறிக்க ஓடி எஸ்கேப் ஆன குட் பேட் அக்லி நடிகர்

Published : Apr 17, 2025, 11:46 AM IST

மலையாள நடிகையிடம் போதையில் அத்துமீறிய குட் பேட் அக்லி பட நடிகரை பிடிக்க போலீசார் விரைந்தபோது அவர் ஓட்டலில் இருந்து ஜன்னல் வழியே குதித்து தப்பிச் சென்றுள்ளார்.

PREV
14
போதையில் நடிகையிடம் அத்துமீறல்; போலீஸை பார்த்ததும் தலைதெறிக்க ஓடி எஸ்கேப் ஆன குட் பேட் அக்லி நடிகர்

Good Bad Ugly Actor misbehave with Vincy aloshious : மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ தமிழிலும் விஜய்யுடன் பீஸ்ட், அஜித்தின் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருப்பது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தி தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக நடிகை வின்சி அலோஷியஸ் என்பவர் திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார். சூத்திரவாக்கியம் என்ற படத்தின் படப்பிடிப்பில் தான் நடிகைக்கு எதிராக போதைப்பொருள் பயன்படுத்தி ஷைன் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

24
Shine Tom Chacko

தலைதெறிக்க ஓடிய ஷைன் டாம் சாக்கோ

இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்ய போதுமான தகவல்கள் கிடைத்தால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் சோதனையின் போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஹோட்டலில் இருந்து தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கலூரில் உள்ள பிஜிஎஸ் வேதாந்தா என்ற ஹோட்டலில் இருந்து ஷைன் தப்பி ஓடி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்.... பிரேக் அப் ஆன நிச்சயதார்த்தம்.. மீண்டும் சிங்கிளாக மாறிட்டேன்.. பீஸ்ட் பட நடிகர் உருக்கம்..

34
shine tom Chacko Esdcape From Hotel

சிசிடிவியால் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ

மூன்றாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் உள்ள தகரத்தின் மீது ஷைன் குதித்துள்ளார். அவர் குதித்ததில் தகரம் உடைந்தது, பின்னர் இரண்டாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் தாவி, அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக ஷைன் தப்பி ஓடி இருக்கிறார். இதன் சிசிடிவி காட்சிகள் தான் தற்போது வெளியாகியுள்ளன. ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார், ஷைன் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றிருந்தனர். சோதனை தகவல் கசிந்ததில் ஹோட்டல் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

44
Good Bad Ugly Actor Shine Tom Chacko

ஷைன் டாம் சாக்கோவுக்கு ஸ்கெட்ச் போட்ட போலீசார்

இந்த விவகாரம் தொடர்பாக ஹோட்டல் ஊழியர்களிடமும் வாக்குமூலம் பெறப்படும் என கூறப்படுகிறது. நேற்று இரவு போலீசாரின் போதைப்பொருள் சோதனையின் போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடி இருக்கிறார். கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் சோதனை நடத்திய போது தான் இந்த சம்பவம் நடந்தது. ஷைனும் அவரது குழுவும் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலின் அடிப்படையில் ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டது. 314 என்ற எண் கொண்ட அறையில் ஷைன் இருந்தார். அவர் எங்கு தப்பிச் சென்றார் என்பதையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.... அத்துமீறல் புகார்... விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பீஸ்ட் பட வில்லன்

Read more Photos on
click me!

Recommended Stories