Who is DJ Vasi Sachi ? : யார் இந்த டிஜே வசி என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. அவரை விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் தான் இந்த டிஜே வசி யார் என்பதை நெட்டிசன்கள் வலைவீசி தேடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று திடீரென திருமண புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் கால்யாண வாழ்க்கையை தொடங்கிவிட்டதாக அறிவித்தனர். இந்த திருமணம் பலருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது.
24
Priyanka Deshpande Husband DJ Vasi
யார் இந்த டிஜே வசி?
பிரியங்காவின் இரண்டாவது கணவரான வசி, புகழ்பெற்ற டிஜேவாக வலம் வருகிறார். இவர் பப்புகளிலும், பார்ட்டிகளிலும் டிஜேவாக பணியாற்றி இருக்கிறார். இதன்மூலம் திரைப்பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுடன் வசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் டிஜே மட்டுமின்றி Clique 187 என்கிற ஈவண்ட் மேனேஜ்மண்ட் கம்பெனியையும் நடத்தி வருகிறார். அந்த கம்பெனி மூலம் ஏராளமான பிரைவேட் பார்ட்டிகளையும், பிரபலங்களின் திருமணங்களையும் நடத்தி இருக்கிறார் டிஜே வசி. இதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டேவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, அவர் ஒருமுறை பார்ட்டிக்கு சென்றபோது அங்கு டிஜே வசி உடன் அறிமுகமாகி இருக்கிறார். முதல் சந்திப்பிலேயே வசியை பார்த்து இம்பிரஸ் ஆன பிரியங்கா, பின்னர் அவருடன் நெருங்கி பழக தொடங்கி இருக்கிறார். இது நாளடைவில் காதலாக மாறியதும், இருவரும் குடும்பத்தினரிடம் தங்கள் காதலை சொல்லி கிரீன் சிக்னல் வாங்கி இருக்கிறார்கள். அதன்பின்னர் இவர்களது திருமணம் நடைபெற்று உள்ளது.
44
Priyanka Deshpande Second Marriage Photos
விமர்சிக்கப்படும் பிரியங்காவின் 2வது திருமணம்
பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய இரண்டாவது திருமண புகைப்படங்களை பதிவிட்டதும், அவரை வாழ்த்தி ஏராளமானோர் கமெண்ட் செய்தாலும், சிலர் அவரின் இந்த திருமணத்தை விமர்சித்தும் பதிவிட்டு இருந்தனர். பிரியங்காவின் கணவர் வசி வெள்ளை நிற முடியுடன் காட்சியளித்ததால் வயதானவரை அவர் திருமணம் செய்துள்ளார் என்று சிலர் விமர்சிக்க, காதலிக்க வயசு முக்கிமில்ல மனசு இருந்தா போதும் என பிரியங்கா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.