Good Bad Ugly Update : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வந்தது. அஜித்தின் கெரியரில் வித்தியாசமான படமாக அது அமைந்தாலும் ரசிகர்களை திருப்திபடுத்திய படமாக விடாமுயற்சி அமையவில்லை. இதனால் அப்செட்டில் இருக்கும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த அவர் நடித்துள்ள அடுத்த படமான குட் பேட் அக்லி அடுத்தடுத்த அப்டேட்டுடன் அதகளமாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.
24
Good bad ugly Ajith
குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், சிம்ரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் அண்மையில் 1800 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா 2 உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் குட் பேட் அக்லி படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருந்தார். பின்னர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேவி ஸ்ரீ பிரசாத் அப்படத்தில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதற்கு முன்னர் அஜித் நடித்த கிரீடம் படத்திற்கு இசையமைத்த ஜிவி தற்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்திற்கான இசை மற்றும் பாடல்கள் வேறலெவலில் வந்திருப்பதாக அவர் பல்வேறு பேட்டிகளிலும் கூறி வருகிறார்.
44
Good bad ugly update
விடாமுயற்சி படம் கொடுத்த ஏமாற்றத்தால் அப்செட்டில் இருக்கும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த தற்போது தரமான அப்டேட் ஒன்றை குட் பேட் அக்லி படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அப்படத்தில் நடிகை திரிஷாவின் கேரக்டர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகை திரிஷா ரம்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். குட் பேட் அக்லி படமே செம மாஸாக இருக்கும் என கூறப்படுவதால் அப்படம் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.