தளபதியின் 'கோட்' பட வசூலை சல்லி சல்லியால் நொறுக்கிய 'குட் பேட் அக்லி' வசூல்! அதிகார பூர்வ அறிவிப்பு!

Published : Apr 11, 2025, 08:34 PM ISTUpdated : Apr 11, 2025, 08:56 PM IST

அஜித் நடிப்பில் நேற்று (ஏப்ரல் 10-ஆம் தேதி) ரிலீஸ் ஆன, 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் q, முதல் நாள் தமிழக வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

PREV
15
தளபதியின் 'கோட்' பட வசூலை சல்லி சல்லியால் நொறுக்கிய 'குட் பேட் அக்லி' வசூல்! அதிகார பூர்வ அறிவிப்பு!

விடாமுயற்சியில் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்:

அஜித்துக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், சமீப காலமாக 
அவரது படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாமல் போனது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன 'விடாமுயற்சி' திரைப்படம்,  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது... இது இப்படத்தின் மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்பட்டது. ரூ.350 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.135 கோடி மட்டுமே பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது. அதே நேரம் சாட்டிலைட், டிஜிட்டல், மற்றும் வியாபார ரீதியில் நல்ல லாபம் ஈட்டியதாக கூறப்பட்டது.

25
Ajith And Adhik Ravichandran Combo:

அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்:

இதை தொடர்ந்து அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் காம்போவில் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'குட் பேட் அக்லி'. மகனுக்காக மீண்டு டானாக மாறுகிறார் அஜித் என்பது தான் கதைக்களம் என்றாலும், இதை லாஜிக் எதுவும் பார்க்காமல்... ரசிகர்கள் ரசிக்கும் விதமாக பரபரக்க வைக்கும் காட்சிகளுடன் தியேட்டரையே அதிர வைத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்கியதா? பட்டைய கிளப்பியதா? வசூல் நிலவரம் இதோ

 

35
Ajith Kumar starrer Good Bad Ugly

பல படங்களின் கலவையாக உருவாகியுள்ள குட் பேட் அக்லி:
 

இதற்கு முன்னர் அஜித் நடிப்பில் வெளியான ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், விடாமுயற்சி, அமர்க்களம், தீனா, போன்ற படங்களின் Reference காட்சிகளுடன் தனி ரகமான படைப்பாக இப்படம் இருக்கிறது என்பதே ரசிகர்களின் கருத்து. அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில், அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரபு, பிரியா வாரியார், யோகி பாபு, பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்துள்ளனர்.

 

45
Thalapathy Vijay Got Tamilnadu Collection

'கோட்' படம் தமிழக வசூல்:

இந்நிலையில், இந்த படத்தின் தமிழக வசூல் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்க்கு முன் அதிக வசூல் செய்த தளபதியின் 'கோட்' பட வசூல் சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளார் அஜித். வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த ஆண்டு வெளியான 'கோட்' படம் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் 30.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அளவில் அதிக வசூல் செய்த படமாக கோட் மாறியது.

குட் பேட் அக்லியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்; ஆனா அஜித் ரியாக்‌ஷன் என்ன?

55
Good Bad Ugly Tamilnadu Collection:

'குட் பேட் அக்லி' வசூல்:

இந்த சாதனையை இப்போது சைலெண்டாக 'குட் பேட் அக்லி' முறியடித்துள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில், ரூ.30.9 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டருடன் அதிகார பூர்வாமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக 'குட் பேட் அக்லி' மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வருவதால்... திரையரங்கு உரிமையாளர்கள் இப்படம் 500 கோடி வசூலை எட்டும் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories