
மிஸ் சென்னை பட்டம் வென்ற கையோடு சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் திரிஷா. இவர் முதலில் ஜோடி படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக நடித்திருந்தார். இதையடுத்து அமீர் இயக்கிய மெளனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் திரிஷா.
நடிகை திரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படமே ஹிட் ஆனதை தொடர்ந்து விக்ரமுடன் சாமி, விஜய்யுடன் கில்லி, அஜித்துடன் கிரீடம் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களோடு அவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதால், கோலிவுட்டின் ராசியான ஹீரோயினாக உருவெடுத்தார் திரிஷா. கோலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை என்கிற பெருமையையும் பெற்றவர் திரிஷா தான்.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல், ரஜினிகாந்த், தனுஷ், கார்த்தி, சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் திரிஷா. நடிகை திரிஷாவுக்கு தற்போது வயது 40ஐ கடந்துவிட்டாலும் அவர் அதே இளமையுடன் இருப்பதால் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளது. அண்மையில் கூட விஜய்யின் கோட் படத்தில் முதன்முறையாக ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார் திரிஷா.
நடிகை திரிஷா கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. குறிப்பாக தமிழில் கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி உள்ள தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார் திரிஷா. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆகிறது.
இதுதவிர நடிகர் அஜித் உடன் 2 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று விடாமுயற்சி. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. மற்றொரு படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... சூர்யா 45 படத்தில் இருந்து திடீரென விலகிய ஏ.ஆர்.ரகுமான் - காரணம் என்ன?
மேலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சூர்யா 45 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் திரிஷா. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இதுதவிர அவர் இயக்க உள்ள மற்றொரு படமான மாசாணி அம்மன் திரைப்படத்திலும் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தில் அம்மனாக நடிக்க உள்ளார் திரிஷா.
கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் நடிகை திரிஷா கைவசம் படங்கள் உள்ளன. தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக விஸ்வம்பரா என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் திரிஷா. இதுதவிர மலையாளத்தில் டோவினோ தாமஸ் ஜோடியாக ஐடெண்டிட்டி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படி 41 வயதிலும் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வரும் திரிஷா தான் தற்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் சொகுசு பங்களாக்கள் உள்ளன.
நடிகை திரிஷாவிடம் பிஎம்டபிள்யூ 8 மற்றும் 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ரேஞ்சு ரோவர் எவோக் உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன. இவரின் சொத்து மதிப்பு 100 முதல் 110 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சினிமா மட்டுமின்றி விளம்பரங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார் திரிஷா.
இதையும் படியுங்கள்... 2024-ல் கோலிவுட் தலையில் தூக்கி கொண்டாடிய டாப் 10 மூவீஸ் - ஒரு பார்வை