RJ Ananthi, Vijay Sethupathi
பிக் பாஸ் டபுள் எவிக்ஷன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 9 வாரங்களைக் கடந்து 10வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆவது வழக்கம் தான். ஆனால் இந்த சீசனில் முதல் 8 வாரம் டபுள் எவிக்ஷனே நடக்காமல் இருந்த நிலையில், 9-வது வாரத்தில் டபுள் எவிக்ஷன் என அறிவித்து ட்விஸ்ட் கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்தடுத்து சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
RJ Ananthi Eliminated
வெளியேறிய சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கே இவர்களின் எவிக்ஷன் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஏனெனில் எலிமினேஷனை அறிவிக்கும் முன்னர் போட்டியாளர்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என விஜய் சேதுபதி கேட்டதற்கு பெரும்பாலானோர் சொன்னது ரயான் மற்றும் சத்யாவின் பெயர்கள் தான். அதில் ஒருவர் கூட ஆர்.ஜே.ஆனந்தி பெயரையோ, சாச்சனா பெயரையோ சொல்லவில்லை. அதனால் அவர்களுக்கே இந்த டபுள் எவிக்ஷன் எதிர்பாரா ஒன்று தான்.
இதையும் படியுங்கள்... வெயிட்டான சம்பளத்துடன் வெளியேறிய சாச்சனா - அடேங்கப்பா இத்தனை லட்சமா?
Bigg Boss RJ Ananthi
கண்ணீர்விட்ட அன்ஷிதா
நேற்று முதலில் ஆர்.ஜே.ஆனந்தியை தான் எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. அவர் பெயர் எலிமினேஷன் கார்டில் வந்ததை பார்த்ததும் அவரது தோழிகளான பவித்ரா, அன்ஷிதா ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் ஆர்.ஜே.ஆனந்தி அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புன்னகையோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். டபுள் எவிக்ஷனில் சிக்கி எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
RJ Ananthi Salary
ஆர்.ஜே.ஆனந்தி சம்பளம்
அதன்படி அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதன்படி அவர் மொத்தம் விளையாடிய 63 நாட்களுக்கு சேர்த்து அவருக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்களில் அதிக சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர் ஆர்.ஜே.ஆனந்தி தான். இவருடன் சேர்ந்து எலிமினேட் ஆன சாச்சனா ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் டபுள் எவிக்ஷனில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட் - எலிமினேட் ஆனது இவர்களா?