வெயிட்டான சம்பளத்துடன் வெளியேறிய சாச்சனா - அடேங்கப்பா இத்தனை லட்சமா?

First Published | Dec 8, 2024, 3:01 PM IST

Bigg Boss Sachana Salary : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியுள்ள சாச்சனா நமிதாஸ் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

Sachana

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் முத்துக்குமரன், ஜாக்குலின், செளந்தர்யா, மஞ்சரி, சாச்சனா, ஆனந்தி உள்பட மொத்தம் 12 பேர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் நேற்றை வீக் எண்ட் எபிசோடு முடிவில் ஜாக்குலின் மற்றும் செளந்தர்யாவை காப்பாற்றினார் விஜய் சேதுபதி.

Bigg Boss Sachana

எஞ்சியுள்ள 10 பேரில் இருந்து யார் எலிமினேட் ஆவார்கள் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு திடீர் ட்விஸ்ட் ஆக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்று உள்ளது. அதில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சாச்சனா இந்த சீசனில் எலிமினேட் ஆவது இது இரண்டாவது முறை ஆகும்.

Tap to resize

Sachana Namidass

இதற்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் நாளே எலிமினேட் ஆன போட்டியாளர் சாச்சனா தான். பின்னர் சீக்ரெட் ரூமில் மூன்று நாட்கள் இருந்த சாச்சனா. நான்காவது நாள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பின்னர் பலமுறை எலிமினேஷனில் இருந்து தப்பி வந்த சாச்சனா ஒரு வழியாக இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்... வலியால் துடித்த சாச்சனா; அக்கறை காட்டிய அருணை பலிகடா ஆக்கி கேம் ஆடும் கேர்ள்ஸ்

Bigg Boss Sachana Salary

சாச்சனா இந்நிகழ்ச்சியில் விளையாடிய 60 நாட்களுக்கு அவர் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. அந்த வகையில் 60 நாட்களுக்கு அவர் 12 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்த சீசனில் இதுவரை எலிமினேட்  ஆன போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் சாச்சனா தான்.

Vijay Sethupathi, Sachana

விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சாச்சனா, அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் எஸ்.கே.23 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. தற்போது பிக்பாஸ் மூலம் மேலும் பேமஸ் ஆகி உள்ளதால் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்பு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சகுனி வேலை பார்த்த சாச்சனாவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி; அந்த வார்த்தை சொல்லி திட்டிய சுனிதா

Latest Videos

click me!