ரசிகையின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் கொடுத்த 'புஷ்பா 2' அல்லு அர்ஜுன்!

First Published | Dec 8, 2024, 9:55 PM IST

அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியைக் காணவந்தபோது இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

Pushpa 2 Allu Arjun

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் முதல் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட சந்தியா தியேட்டரில் நடந்த சோகமான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து, நடிகர் அல்லு அர்ஜுன் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Sandhya Theatre Tragedy

தியேட்டரில் நடந்த சம்பவத்தில் அல்லு அர்ஜூனின் தீவிர ரசிகரான ரேவதி (39) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது ஒன்பது வயது மகன் ஸ்ரீ தேஜ் நெரிசலில் சிக்கி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

Tap to resize

Pushpa 2 Tragedy

அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியைக் காணவந்தபோது இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். குடும்பத்தின் மருத்துவச் செலவுகளை ஏற்பதாகவும், எதிர்காலத்தில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் தன்னால் முடிந்தவரை கவனித்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

Allu Arjun donates Rs 25 lakh

அல்லு அர்ஜுன், “நாம் என்ன செய்தாலும் ஆறுதல் சொன்னாலும் எதுவும் இந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் எங்கள் தரப்பில் இருந்து, உங்களுக்கு எது தேவைப்பட்டாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். நாங்கள் உணர்வுபூர்வமாக உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்காக, குறிப்பாக குழந்தைகளுக்காக நான் உடன் இருக்கிறேன். அதற்காக என் தரப்பில் இருந்து ரூ.25 லட்சத்தை நன்கொடையாக அளிக்க விரும்புகிறேன். எல்லா மருத்துவச் செலவையும் நாங்கள் பார்த்துக்கோள்வோம். இந்தக் கடினமான சூழலைப் புரிந்துகொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

Allu Arjun on Sandhya Theatre Tragedy

"ரேவதி என்ற பெண் காயம் காரணமாக இறந்தார் என்று கேள்விப்பட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. தியேட்டருக்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பது அனைவருக்கும் விருப்பமான செயல்தான். ஆனால் இந்த சம்பவம் எங்கள் இதயத்தை உடைத்துவிட்டது" என்றும் அவர் கூறியுள்ளார்.

Allu Arjun Viral Video

பாதுகாப்பு முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் பேசிய அல்லு, திரைப்படத் திரையிடலில் கலந்துகொள்ளும்போது எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். "அனைத்து ரசிகர்களுக்கும் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், திரைப்படங்களை ரசிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தயவுசெய்து கவனமாக இருங்கள். படத்தைப் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.

Pushpa 2 stampede victim Revathi

புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சிகள் டிசம்பர் 4ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பெங்களூருவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் சந்தியா தியேட்டருக்கு வந்தபோது கூட்டநெரிசலில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் ரேவதியும் அவரது குழந்தைகளும் மயக்கமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரேவதி இறந்துவிட்டார். ஸ்ரீ தேஜ் ஆபத்தான நிலையில் பேகம்பேட்டையில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Latest Videos

click me!