1000 கோடி அடிக்கும்னு பில்டப் விடப்பட்ட கோட் படம் இதுவரை செய்துள்ள வசூல் இவ்வளவுதானா?

First Published | Sep 18, 2024, 3:06 PM IST

GOAT Box Office Collection : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் பற்றி பார்க்கலாம்.

venkat prabhu, Vijay

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் சுமார் ரூ.400 கோடி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கிய கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜய் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் மிரட்டி இருந்தார்.

GOAT Movie

கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானதால் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் செய்த படமாக கோட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் வெளிப்பாடாக ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும் கோட் திரைப்படம் உலகளவில் ரூ.126 கோடி வசூலித்தது.

இதையும் படியுங்கள்... வயிறுமுட்ட சாப்பாடு போட்டு... ஓட்டல் பிசினஸில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா பிரபலங்கள் லிஸ்ட் இதோ

Tap to resize

GOAT Movie Box Office

ஆனால் போகப்போக படத்திற்கு சற்று நெகடிவ் விமர்சனங்கள் வந்ததால் வசூலும் மளமளவென சரியத் தொடங்கின. முதல் வாரத்தில் வசூல் வேட்டையாடிய கோட் திரைப்படம் இரண்டாம் வாரத்தில் இருந்து டல் அடிக்க தொடங்கியது. ஆரம்பத்தில் ஆயிரம் கோடி வசூல் ஈட்டும் என பில்டப் விடப்பட்ட கோட் திரைப்படம் தற்போது 500 கோடியை எட்டுவதே கேள்விக்குறியாக உள்ளது. தற்போது 13 நாட்கள் முடிவில் கோட் திரைப்படம் வெறும் 407 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது.

GOAT movie Worldwide collection

இதில் இந்தியாவில் மட்டும் கோட் திரைப்படம் ரூ.226 கோடி வசூலித்து இருக்கிறது. இப்படம் இன்னும் இரு தினங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கிவிடுவார்கள். ஏனெனில் இந்த வாரம் மட்டும் 7 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதனால் நாளையுடன் கோட் படத்தின் வசூல் வேட்டை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோட் 500 கோடி வசூலை எட்டுவதே கஷ்டம் தானாம். விஜய்யின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய லியோ படத்தின் வசூல் சாதனையையும் கோட் எட்டிப்பிடிக்க வாய்ப்பில்லை. லியோ படம் 610 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 3 மனைவிகள்; 15 குழந்தைகள்! கண்ணதாசனின் பிக்பாஸ் பேமிலி பற்றி தெரியுமா?

Latest Videos

click me!