Published : Sep 18, 2024, 01:53 PM ISTUpdated : Sep 18, 2024, 01:59 PM IST
ரஜினி - கமல் பட ஹீரோயின் ஒருவர், தன்னுடைய கணவரிடம் திருமணத்திற்கு முன்பே தான் நடித்த படங்களை பார்க்க கூடாது என கண்டீஷன் போட்டு திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் எல்லூரை சேர்ந்த நடிகை மாதவி, தனது 14வது வயதிலேயே தெலுங்கு மொழியில் ஹீரோயினாக அறிமுகமாகி, மிக குறுகிய காலத்திலேயே.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். 80-பது காலகட்டத்தில் பல ஹீரோயின்ஸ் கவர்ச்சி காட்ட தயங்கியபோது தில்லாக கவர்ச்சி வேடத்தில் நடித்தார் மாதவி. குறிப்பாக கமல்ஹாசனுடன் டிக் டிக் டிக் படத்தில் பிகினி வேடத்தில் நடித்து பிரமிக்க வைத்தார்.
25
Veteran Actress Maadhavi
இவர் நடிகை என்பதை தாண்டி, சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆவர். நடிக்க வருவதற்கு முன்பே ஏராளமான மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார். பாரத நாட்டியம் மூலம் கிடைத்த பிரபலம் தான் இவருக்கு தெலுங்கில் திரைப்பட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. அந்த வகையில் கடந்த 1976ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, Thoorpu Padamara திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் மாதவி. இதை தொடர்ந்து தமிழில், 1979-ஆம் ஆண்டு வெளியான புதிய தோரணங்கள் மூலம் அறிமுகமானார். ரஜினி, கமல், ஆகியோரின் அதிஷ்ட தேவதையாக பார்க்கப்பட்ட இவர், இவர் ரஜினி - கமலுடன் இணைந்து நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என ரசிகர்கள் நினைக்கும் நிலை இருந்தது.
தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கிலும் சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கவர்ச்சி வேடத்தில் நடித்து பிரபலமான மாதவி, 1996-ஆம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த ரால்ப் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு, மொத்தமாக திரையுலகை விட்டே விலகினார். இவர் பரவலாக தன்னுடைய படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டி நடித்துள்ளதாலும், ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ளதாலும் தன்னுடைய படங்களை பார்க்க கூடாது என கணவருக்கு கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது.
45
Actress Maadhavi Husband
தன்னுடைய கணவர் ரால்ப் ஷர்மாவுடன் அமெரிக்காவில் வசித்து வரும் மாதவி, ஒரு மருந்து நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய கணவருக்கு போட்ட கண்டீஷன் குறித்து நடிகை மாதவியே ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிபந்தனை தான் விதிக்க காரணம்,என் கணவர் என்னை சாதாரண பெண்ணாக பார்க்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறன். என்னுடைய படங்களைப் பார்த்தால், நான் ஒரு பிரபலம் என்று அவர் உணர்வார். அந்த பயத்தில் தான் என் படங்களை பார்க்க கூடாது என கூறியதாக தெரிவித்துள்ளார்.
உங்கள் மனைவி நடித்த படங்களை நீங்கள் பார்த்தீர்களா என்று யாராவது கேட்டால், பார்த்திருக்கிறேன் என கூறுகள் என சொல்லியதாகவும். அதற்காக நீங்கள் பொய் சொல்ல வேண்டாம் என கூறி... மாதவி தன்னுடைய கணவருக்கு தெலுங்கில் வெளியான மாத்ருதேவ் பாவா படத்தை மட்டும் போட்டு காட்டியதாகக் கூறியுள்ளார். அந்த படத்தை அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் வெட்கத்துடன் முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். என்னை நடிகையாக பார்த்தால் எப்படி இருப்பேன் என அன்று அவர் தெரிந்து கொண்டார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் மிகவும் நல்ல நடிகை என்று தன்னுடைய கணவர் பாராட்டியதாக மாதவி கூறியுள்ளார். தற்போது மாதவி தனக்கு சொந்தமான மருந்து நிறுவனங்களை கவனித்து வருகிறார். அவர்கள் ஒருபுறம் குழந்தைகளுடன், மறுபுறம் நிறுவன விவகாரங்களில் பிஸியாக இருக்கிறார்கள். தனது குழந்தைகளில் யாராவது சினிமா துறையில் நடிகையானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று மாதவி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.