சினிமாவில் கோடி, கோடியாய் சம்பாதிக்கும் பிரபலங்கள் அதை வேறு தொழில்களில் முதலீடு செய்வது உண்டு. அப்படி சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ஓட்டல் பிசினஸில் முதலீடு செய்து மக்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு அதன் மூலம் கோடி கோடியாய் லாபம் ஈட்டி வரும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரியா பவானி சங்கர்
நடிகர்களை போல் நடிகைகளும் ஓட்டல் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கின்றனர். நடிகை பிரியா பவானி சங்கர் சென்னையில் லயம்ஸ் டின்னர் என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார். சென்னை மாம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த மல்டி குசைன் ரெஸ்டாரண்டில் சைனீஸ், இத்தாலியன் போன்ற உணவு வகைகள் கிடைக்கும்.
சிம்ரன்
தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். ரசிகர்களால் செல்லமாக இடுப்பழகி என அழைக்கப்படும் இவர் அண்மையில் வெளிவந்த அந்தகன் படத்தில் வில்லியாக மிரட்டி இருந்தார். இவர் சென்னையில் ஓட்டல் பிசினஸும் நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக சென்னை சோலிங்கநல்லூரில் Godka By Simran என்கிற உணவகம் இயங்கி வருகிறது.