Sunny Leone Net Worth: அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : May 13, 2026, 03:33 PM IST

Sunny Leone Net Worth: நடிகை சன்னி லியோனின் திரைப்படங்கள், சொந்த தொழில் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் மூலம் சம்பாதிக்கும் இவர் சொத்துக்களின் விவரங்கள் ஆச்சரியமளிக்கின்றன.

PREV
16

கிளாமர் குயின் சன்னி லியோனுக்கு 45 வயதாகிறது. கனடாவின் சர்னியாவில் மே 13, 1981-ல் பிறந்த இவர். பாலிவுட் மற்றும் தென்னிந்தியப் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு உண்டு. ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழில் அறிமுகமானார். நடிப்பைத் தாண்டி 'StarStruck' என்ற பெயரில் சொந்தமாக அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சின்ன சின்ன ரோல்கள் மூலமே பெரிய சொத்து சேர்த்துள்ளார். அதன் விவரங்களைப் பார்க்கலாம்.

26

சன்னி லியோனின் சொத்து மதிப்பு சுமார் 100 முதல் 115 கோடி ரூபாய் ஆகும். ஒரு படத்தில் நடிக்க 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் தவிர, சொந்த தொழில், சமூக வலைதளங்கள் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் மூலமும் கணிசமாக சம்பாதிக்கிறார்.

36

மும்பை அந்தேரியில் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்டமான பென்ட்ஹவுஸ் சன்னி லியோனுக்கு உள்ளது. இவர் 2025-ல் மும்பை ஓஷிவாராவில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஒரு அலுவலக இடத்தையும் வாங்கினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், புகழ்பெற்ற ஹாலிவுட் சைன் அருகே இவருக்கு ஒரு சொகுசு பங்களா இருக்கிறது.

46

சன்னி லியோனிடம் பல காஸ்ட்லி கார்கள் உள்ளன. மஸராட்டி, பிஎம்டபிள்யூ, ஆடி, மஸராட்டி கிப்லி நெரிசிமோ, மஸராட்டி குவாட்ரோபோர்டே, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் ஆடி ஏ5 போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இந்த கார்களின் மதிப்பு பல கோடிகள் ஆகும்.

56

சன்னி லியோனின் உண்மையான பெயர் கரஞ்சித் கவுர். சினிமா துறைக்கு வந்த பிறகு தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவர் 2012-ம் ஆண்டு 'ஜிஸ்ம் 2' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 2013-ல் வெளியான 'ஜாக்பாட்' படமும் தோல்வியடைந்தது. ஆனால், 2014-ல் வந்த 'ராகினி எம்எம்எஸ் 2' என்ற ஹாரர் படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டானது.

66

ஹேட் ஸ்டோரி 2, லவ் யூ ஆலியா, சிங் இஸ் பிளிங், மஸ்திஜாடே, ஃபாடு, ரயீஸ், நூர், பாட்ஷாஹோ, பூமி, ஜூட்டா கஹின் கா, மோத்திச்சூர் சக்னச்சூர் போன்ற பல படங்களில் சன்னி லியோன் நடித்துள்ளார். ரங்கீலா, ஷீரோ, ஹெலன் மற்றும் தி பேட்டில் ஆஃப் பீமா கோரேகான்ஆகியவை இவரது வரவிருக்கும் படங்கள். இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டே வெளியாக உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories