Chief Minister Joseph Vijay Salary : தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவர் வாங்கும் சம்பளம் பற்றி பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை இந்த தேர்தலில் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறி இருந்தன. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் தவிடுபொடி ஆக்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இந்த தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
24
முதல்வர் விஜய்
எம்ஜிஆர் தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்றிருந்தார் விஜய். இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமையும் சூழல் உருவானது. இருப்பினும் பெரும்பான்மைக்கு மேலும் 11 சீட் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார் விஜய். கடந்த மே 10ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் விஜய். அந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார்.
34
சினிமாவில் விஜய் வாங்கிய சம்பளம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து பெரும்பாலானோர் சொன்னது விஜய், சினிமாவில் மிகப்பெரிய சம்பளத்தை விட்டுட்டு மக்களுக்கு நல்லது செய்ய வருகிறார் என்பது தான். அதன்படி அவர் சினிமாவில் கடைசியாக நடித்த படத்திற்காக ரூ.275 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். தமிழ் சினிமா வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை வேறு எந்த நடிகரும் வாங்கியதில்லை. இவ்வளவு பெரிய தொகையை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு முதல்வரான பின்னர் கிடைக்கும் சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர்.
முதல்வராக விஜய் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு மாதத்திற்கு 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுமாம். இதுதவிர இதர சலுகைகள் எல்லாம் சேர்த்தால் அவருக்கு மாதத்திற்கு 2.85 லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்குமாம். இதனை கணக்கிட்டால் ஒரு வருடத்திற்கு அவருக்கு ரூ.34.2 லட்சம் சம்பளமாக கிடைக்கும். அவர் சினிமாவில் வாங்கிய சம்பளத்தோடு ஒப்பிட்டால் அவரின் ஒரு நாள் சம்பளம் கூட இதைவிட அதிகம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.