திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் பிளான் குறித்து மனம்திறந்து பேசிய மஞ்சிமா மோகன்

Published : Dec 01, 2022, 10:04 AM IST

கவுதம் கார்த்திக் உடன் திருமணம் முடிந்த கையோடு தங்களது ஹனிமூன் பிளான் பற்றி சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன். 

PREV
14
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் பிளான் குறித்து மனம்திறந்து பேசிய மஞ்சிமா மோகன்

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீசான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

24

இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும், மஞ்சிமா மோகனுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து மூன்று ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டது.

இதையும் படியுங்கள்... நயன்தாராவின் கோல்டு திரைப்படத்துக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்... தமிழ்நாட்டில் இன்று ரிலீசாகாது

34

இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. எளிமையாக நடந்த இவர்களது திருமணத்தில் நடிகர்கள் ஜீவா, விக்ரம் பிரபு, ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

44

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு தங்களது ஹனிமூன் பிளான் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன். அதன்படி தற்போது கவுதம் கார்த்திக் பத்து தல பட ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் ஹனிமூன் பற்று தற்போது யோசிக்கவில்லை என்றும், கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு விடுமுறையின் போது ஹனிமூன் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் மஞ்சிமா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் பரிசாக தந்த காரை திருப்பி கொடுத்த ‘லவ் டுடே’ பிரதீப் - அதற்கு பதில் அவர் கேட்டது என்ன தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories