Gangers vs Sumo Box Office Collection : கோடை காலம் வந்துவிட்டாலே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும். இதைக் கருத்தில் கொண்டு குழந்தைகளை கவரும்படியான படங்கள் அதிகளவில் ரிலீஸ் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் திரைப்படமும், அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடித்த சுமோ திரைப்படமும் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன என்பதைப் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.
24
Gangers
பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கேங்கர்ஸ்
கேங்கர்ஸ் திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியதோடு அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுந்தர் சி - வடிவேலு காம்போவில் இதற்கு முன் வெளிவந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. அதேபோல் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கேங்கர்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நேற்று மட்டும் ரூ.1.9 கோடி வசூலித்து உள்ளது. இதுவரை கேங்கர்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.
சுமோ திரைப்படத்தை ஹோசிமின் இயக்கி இருந்தார். இப்படத்தில் சிவா ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்தும் நடித்திருந்தார். மேலும் ஜப்பானை சேர்ந்த சுமோ வீரர் ஒருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் கடந்த ஏப்ரல் 25ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார். இப்படம் குழந்தைகளும் கவரும் வகையில் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் வெறும் 27 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளது.
44
Gangers movie Box Office
கேங்கர்ஸ் vs சுமோ வசூல்
கேங்கர்ஸ் படத்துக்கு போட்டியாக வெளியானாலும் சுமோவுக்கு மிகவும் சுமார் வரவேற்பு தான் கிடைத்துள்ளது. கேங்கர்ஸ் vs சுமோ மோதலில் கேங்கர்ஸ் படம் தான் வெற்றிபெற்று உள்ளது. அப்படம் தமிழ்நாட்டிலேயே 6 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடி உள்ள நிலையில், அதற்கு போட்டியாக வந்த சுமோ திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் ஒரு கோடி கூட வசூலிக்கவில்லை. அடுத்து வார நாட்கள் வருவதால் சுமோ படத்தின் வசூல் மேலும் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது. இதனால் மிகப்பெரிய தோல்வி படமாகவும் அது மாற வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.