கேங்கர்ஸ் முதல் நேசிப்பாயா வரை இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் புதுப்படங்களின் லிஸ்ட் இதோ

Published : May 15, 2025, 11:54 AM IST

தமிழ் சினிமாவில் இந்த வாரம் சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் முதல், அதிதி ஷங்கர் நடித்த நேசிப்பாயா வரை என்னென்ன படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
17
OTT Release Movies

தியேட்டர் ரிலீஸ் படங்களுக்கு போட்டியாக ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் டஜன் கணக்கிலான படங்கள் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன. இந்த வாரம் தியேட்டரில் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபு நடித்த ஜோரா கைய தட்டுங்க ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக ஓடிடியிலும் சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள்... எந்த ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27
கேங்கர்ஸ்

சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு, வாணி போஜன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கேங்கர்ஸ். இப்படத்தை குஷ்பூ தயாரித்து இருந்தார். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை ஆடியது. இந்நிலையில், தற்போது கேங்கர்ஸ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் மே 15ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

37
நேசிப்பாயா

பில்லா, ஆரம்பம், சர்வம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் நேசிப்பாயா. இப்படத்தில் ஆகாஷ் முரளியும், அதிதி ஷங்கரும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இப்படம் வருகிற மே 16ந் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

47
தி டோர்

தமிழில் அஜித், ரவி மோகன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பாவனா. இவர் கதையின் நாயகியாக நடித்த படம் தி டோர். இப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இந்நிலையில், தற்போது இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி இப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் மே 16ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

57
க.மு. க.பி

புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் க.மு - க.பி (கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்கு பின்). கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குபின் காதலர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை, சினிமாதனமின்றி அழகாக சொல்லும் கதையம்சம் கொண்ட படம் இது. ஹீரோயினாக சரண்யா, ஹீரோவாக விக்னேஷ் ரவி நடித்துள்ள இப்படம் மே 16 முதல் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

67
மனமே

ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் சர்வானந்த் நாயகனாக நடித்துள்ள படம் மனமே. இப்படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படம் மே 16ந் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

77
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்

மலையாளத்தில் பேசில் ஜோசப் நடித்த மரண மாஸ் திரைப்படம் சோனி லிவ் தளத்தில் மே 15ந் தேதி ரிலீஸ் ஆனது. அதேபோல் தெலுங்கில் அனகநாகா என்கிற திரைப்படம் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. இதுதவிர இந்தியில் Bhool Chuk Maaf என்கிற இந்தி படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், HaiJunoon என்கிற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் மே 16ந் தேதி ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories