BB Tamil 7
இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில், இரண்டு அணியாக பிரிந்து போட்டியாளர்கள் மோதிக்கொள்வது மட்டும் இல்லாமல், இரண்டு வீடாகவும் பிரிந்து ஆக்ரோஷமாக தங்களின் விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் வாரம் அனன்யா ராவ் வெளியேற, அவரை தொடர்ந்து பவா செல்ல துரை தானாக முன்வந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிக்பாஸ் பவா செல்லத்துரை வெளியேற சம்மதித்தார்.
BB Tamil 7
இவரை தொடர்ந்து விஜய் வர்மா, வினுஷா, யுகேந்தரன் ஆகியோர் வெளியேறிய நிலையில்... அதன் பின்னர் அதிரடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பினார் பிக்பாஸ். எனவே மீண்டும் போட்டியாளர்கள் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது. கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அன்னபாரதி ஒரே வாரத்தில் வெளியேறிய நிலையில்... இவரை தொடர்ந்து பிரதீப் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்காக பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
Bigg Boss Promo: இது தீர்வு.. தீர்ப்பு அல்ல! முதல் புரோமோவிலேயே இன்றைய சம்பவத்தை உறுதி செய்த கமல்ஹாசன்!
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், விஜய் டிவி தரப்பில் இருந்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
BB Tamil 7
ஆனால் பிரதீப் ரீஎண்ட்ரிக்கு வாய்ப்பே இல்லை என்பதை, இன்றைய முதல் புரோமோவில் உறுதி செய்தார் கமல். அதே போல்.. இன்றைய தினம் மாயா - பூர்ணிமாவின் புல்லி கேங்கிற்கு இன்று செம்ம சம்பவம் உள்ளத்தையும் உறுதி செய்தார்.
மேலும் கமல்ஹாசன் தீர விசாரிக்க வில்லை என்பதை மறைக்கும் விதமாக இந்த ப்ரோமோவில் பேசியுள்ளார் என்கிற கருத்து ஒருபுறம் நிலவ, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீப் வந்தால்... தன்னுடைய தீர்ப்பு தவறு என்பதை தானே ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும் என்பதற்காகவும், பிரதீப் விஷயத்தில் தீர விசாரித்து எடுத்த தீர்வு இது என கூறி கூறி கமல் தன்மீதான குற்றத்தை நியாயப்படுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கமல்ஹாசனின் முதல் புரோமோ வெளியான பின்னர், செஸ்ஸில் ராஜாவை திட்டம் போட்டு கீழே சாய்க்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கேம் ஓவர் என கூறியுள்ளார் பிரதீப். ஹேஷ் டேக்கில், ரெண்டு கை ரெண்டு கால் இல்லனா கூட அவன் பொழச்சிப்பான் சார், கெட்டப்பையன் சார் அவன் என ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டுள்ளார். அதேபோல், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன் என்றும் நல்லாஇருங்க சார் என்றும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது."