மர்மதேசம் முதல் சித்தி வரை : 90ஸ் கிட்ஸின் இந்த ஃபேவரைட் தமிழ் டிவி சீரியல்களை மறக்க முடியுமா?

First Published | Nov 20, 2023, 7:55 PM IST

மர்ம தேசம் முதல் மாயா மச்சிந்திரா என இந்த டிவி கிளாசிக்ஸ் நிகழ்ச்சிகளுக்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய சகாப்தத்தில், 90கள் தான் தொலைக்காட்சியின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்தது. மர்ம தேசம் முதல் மாயா மச்சிந்திரா என இந்த டிவி கிளாசிக்ஸ் நிகழ்ச்சிகளுக்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

கனா காணும் காலங்கள் : 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சீரியல்களில் நிச்சயம் இந்த சீரியல் இடம்பெற்று விடும். 12ஆம் வகுப்பு மாணவர்களின் வாழ்க்கையை ஆழமாக ஆராய்ந்த இந்தத் தொடர், ஆரோக்கியமான போட்டி முதல் குடும்ப விவகாரங்கள், ஈகோ மோதல்கள், பொறாமை, காதல் மற்றும் நட்பின் சிக்கல்கள் வரை மாணவர் வாழ்க்கையின் பல அம்சங்களை நுணுக்கமாக சித்தரித்தது.

Tap to resize

மை டியர் பூதம் : மே 2004 முதல்  2007 வரை 914 எபிசோடுகள் ஒளிபரப்பான மை டியர் பூதம், இளைஞர்கள் மத்தியில் ஒரு பரபரப்பாக இருந்தது. இந்தத் தொடரில் அபிலாஷ், நிவேதா தாமஸ், காந்திமதி மற்றும் வியட்நாம் வீடு சுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த தொடரின் சஸ்பென்ஸ் ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது.

சித்தி : 1999 முதல் 2001 வரை ஒளிபரப்பான இந்த மெகா ஹிட் சீரியல் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை நுணுக்கமாக அலசியது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து இல்லங்களில் இந்த சீரியல் பிரபலமாக இருந்தது. மேலும் இந்த சீரியலில் டைட்டில் பாடலுக்கு இன்றைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். 

மெட்டி ஒலி : நடுத்தர வர்க்க மதிப்புகளுடன் வளர்க்கப்பட்ட ஐந்து சகோதரிகளின் கதையை சித்தரித்து இந்த சீரியல் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி குமார், திருமுருகன், சேத்தன், காவேரி, காயத்திரி சாஸ்திரி, போஸ், வெங்கட், சஞ்சீவ் மற்றும் ரிந்தியா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான சீரியல்களில் இதுவும் ஒன்றாகும்.

சின்ன பாப்பா பெரிய பாப்பா : 

இந்தத் தொடர் குடும்ப இயக்கவியலுக்கு நகைச்சுவை அம்சத்தை கொண்டு வந்தது, குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான நகைச்சுவையான தொடர்புகளை சித்தரிக்கிறது. பிரபலமான ஹிந்தி நிகழ்ச்சியான Tu Tu Main Main மூலம் ஈர்க்கப்பட்டு, தமிழிலும் உருவாக்கப்பட்டது. ஒரு மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையேயான உறவை வில்லத்தனமாக இல்லாமல் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டு ஹிட்டான சீரியல் தான் சின்னபாப்பா பெரிய பாப்பா. இதில் ஸ்ரீ பிரியா மாமியாராகவும், மருமகளாக நிரோஷாவும் நடித்திருந்தனர். 

மாயா மச்சிந்திரா : பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிய மாயா மச்சிந்திரா என்ற தொலைக்காட்சி நாடகம் 90களின் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. மேஜிக், காமெடி, ஃபேண்டஸி என பல அம்சங்கள் இருந்த இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ் விரும்பிய சீரியல்களில் ஒன்று..

மர்ம தேசம் : 

5 பாகங்களாக ஒளிபரப்பான மர்ம தேசம் சீரியல் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான சீரியல்களில் முக்கியமானது. த்ரில்லர் சீரியலாக அன்றைய குழந்தைகளையும் இளைஞர்களையும் நடுங்க வைத்தது. இதில் விடாது கருப்பு பகுதியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சேத்தன், தேவதர்ஷினி, பூ விலங்கு மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த சீரியல் அதிகம் விரும்பப்பட்டது. 

ஜென்மம் X :

அமானுஷ்ய, திரில்லர் சீரியலாக ஒளிபரப்பான இந்த சீரியலின் பாடலே அன்றைய பார்வையாளர்களை நடுங்க வைத்தது. மர்மமான திரைக்கதை, நடிப்பு மூலம் பார்வையாளர்களை இந்த சீரியல் வெகுவாக கவர்ந்தது. 

சக்திமான் :

90ஸ் கிட்ஸ் பார்த்த முதல் சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான் தான். தற்போது பல பான் இந்தியா படங்கள் உருவாகி வரும் நிலையில், அன்றைய காலத்தில் பான் இந்தியா சீரியலாக இருந்தது சக்திமான் சீரியல். முகேஷ் கண்ணா சக்திமானாக நடித்திருந்த இந்த சீரியலை பார்த்து மக்களுக்கு பிரச்சனை வந்தால் சக்திமான் காப்பாற்ற வருவார் என்று பல குழந்தைகளும் நம்பி இருந்தனர்.. சக்திமான் ஸ்டிக்கர், சக்திமான் பேட் என சக்திமான் படம் போட்டு பலர் பொருட்களும் வியாபாரமானது. 

Latest Videos

click me!