Actress : பர்ஸ்ட் படத்துல 1 லட்சம் சம்பளம்... இன்று 10 ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி - யார் இந்த கோலிவுட் நாயகி?

Published : May 09, 2026, 11:29 AM IST

Tamil Actress Surprising Journey : தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே அனைத்து உச்ச நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஒருவர் இன்று 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக உள்ளார்.

PREV
14
Tamil Actress Surprising Journey

தமிழ் சினிமாவில் சில நடிகைகளின் வாழ்க்கை கதைகள் அவர்கள் நடித்த படங்களை மிஞ்சும் வகையில் இருக்கும். சினிமாவில் நாயகியாக அறிமுகமானபோது வெறும் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய அந்த நாயகி, திருமணத்துக்கு பின் 10 ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆகி இருக்கிறார். அந்த நடிகை வேறுயாருமில்லை அசின் தான். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், அவர் நடித்த கஜினி படத்தின் கதையைப் போலவே இருந்ததாக ரசிகர்கள் பலரும் பேசிக் கொள்கிறார்கள். கேரளாவை சேர்ந்த அசின், மிகவும் இளம் வயதிலேயே திரைப்பட உலகில் அறிமுகமானார். ஆரம்பத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த அவர், தமிழில் அறிமுகமானது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம். அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பும், கவர்ச்சியான நடனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

24
தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்த அசின்

அதன்பிறகு அசின் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கஜினி, சிவகாசி, வரலாறு, போக்கிரி, வேல் போன்ற படங்கள் அவரது மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றன. குறிப்பாக தசாவதாரம் படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அசினின் திரை வாழ்க்கையில் அவரது தந்தையின் பங்கு முக்கியமானதாக கூறப்படுகிறது. எந்த கதையை தேர்வு செய்வது, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன முக்கியத்துவம் உள்ளது என்பதனை கவனமாக ஆய்வு செய்த பின்னரே அவர் படங்களை ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் அவர் நடித்த பல படங்களும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்தன.

34
நடிகர் மூலம் மலர்ந்த அசின் காதல்

இதனிடையே பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மூலம் அசினுக்கு தொழிலதிபர் ராகுல் சர்மா அறிமுகமானார். மிக எளிமையாக பழகிய ராகுல் சர்மா ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் என்பதை பின்னர்தான் அசின் அறிந்ததாக கூறப்படுகிறது. அவர் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்பதும், மிகப்பெரிய தொழிலதிபர் என்பதும் தெரியவந்தபோது அசின் ஆச்சரியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. நட்பாக தொடங்கிய உறவு பின்னர் காதலாக மாறியது. அதன் பிறகு இரு குடும்பங்களின் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு அசின் – ராகுல் சர்மா திருமணம் நடைபெற்றது.

44
சினிமாவுக்கு டாடா காட்டிய அசின்

திருமணத்திற்கு பிறகு அசின் முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவு செய்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் வந்தபோதும், அவற்றை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கைக்கு பிறகு கணவரின் தொழில் தொடர்பான சில பொறுப்புகளிலும் அசின் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் உள்ளன. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். குடும்ப வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வரும் அசின், சமூக வலைதளங்களில் அவ்வப்போது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அசினுக்கும் அவரது கணவர் ராகுல் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டடு பிரிய உள்ளதாக, அவர்களது, திருமண வாழ்க்கை குறித்து வதந்திகள் பரவியபோதும், அவை அனைத்தும் உண்மையற்றவை என்று அசின் சமூக வலைதளத்தின் மூலம் விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories