29 The Film Day 1 Box Office : முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன 29 திரைப்படம் - காரணம் என்ன?

Published : May 09, 2026, 09:21 AM IST

29 The Film Box Office : ரத்ன குமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள 29 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
14
29 The Film Day 1 Box Office

இன்றைய இளைஞர்களின் மனநிலையையும், காதலின் பின்னாலுள்ள உண்மையான வாழ்க்கைப் போராட்டங்களையும் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது 29. காதல் என்பது வாழ்க்கையின் முழு அர்த்தமா, அல்லது அதற்குப் பின்பும் ஒரு அடையாளப் பயணம் இருக்கிறதா என்ற கேள்வியை மையமாக வைத்து படம் நகர்கிறது. இப்படத்தை ரத்ன குமார் இயக்கி உள்ளார். இதில் நாயகனாக விதுவும், நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானியும் நடித்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

24
29 பட முதல் நாள் வசூல்

29 படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் அப்படம் வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை. ரிலீஸ் ஆன முதல் நாளே வெறும் ரூ.34 லட்சம் மட்டும் அப்படம் வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நல்ல விமர்சனம் வந்தும் வசூலில் சோபிக்காததற்கு விஜய்யின் அரசியலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. விஜய் எப்போது முதல்வர் ஆவார் என்பதை தெரிந்துகொள்வதிலேயே பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர் இன்றூ சிஎம் ஆக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் அழைப்பு விடுக்காததால் இன்றும் அவர் பதவி ஏற்க வாய்ப்பில்லை. அதனால் 29 படத்தின் இன்றைய வசூலும் பாதிப்படையக் கூடும். மறுபுறம் தென் மாவட்டங்கள் நேற்று பெய்த கோடை மழை காரணமாகவும் பெரும்பாலானோர் தியேட்டருக்கு செல்வதை தவிர்த்தனர். அதுவும் அப்படத்தின் வசூல் சரிவுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

34
29 பட கதை

29 வயதான விது, வாழ்க்கையில் தனக்கென எந்த அடையாளமும் இல்லாமல் தத்தளிக்கும் இளைஞன். அவனது வாழ்வில் வரும் பிரீத்தி அஸ்ரானியின் காதல், அவனுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், “யாரோ ஒருவரின் காதலன்” என்ற அடையாளத்தையும் தருகிறது. அந்த உறவிலேயே உலகத்தை கண்டுகொள்ளும் விதுவுக்கு, காதலைத் தாண்டியும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்பதை உணர்த்த முயற்சிக்கிறார் நாயகி. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைய, காதலை முடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

காதலும் காதலியும் விட்டு சென்ற பிறகு, மீண்டும் தன்னையே தேடும் விதுவின் பயணமே படத்தின் மையக் கருத்தாக மாறுகிறது. இழந்த காதலை மீண்டும் பெறுகிறாரா, அல்லது புதிய வாழ்க்கையை உருவாக்குகிறாரா என்பதைக் காதல், பிரிவு மற்றும் உண்மை வாழ்க்கை உணர்வுகளோடு படம் சொல்லுகிறது.

44
29 படம் எப்படி இருக்கு?

இயக்குநர் ரத்னகுமார், காதலை வெறும் இனிமையான உணர்வாக மட்டும் காட்டாமல், அதன் பின்னால் இருக்கும் உடல், உணர்ச்சி மற்றும் வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே, அதற்கும் அப்பால் தனித்த அடையாளமும் முன்னேற்றமும் அவசியம் என்ற கருத்தை நுட்பமாக காட்சிகளில் சொல்லியிருப்பது படத்தின் பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், 29 ஒரு சாதாரண காதல் திரைப்படமாக மட்டும் இல்லாமல், காதலைத் தாண்டிய வாழ்க்கை பற்றியும் பேசும் உணர்வுப்பூர்வமான அனுபவமாக திகழ்கிறது. காதலர்களுக்கு மட்டுமல்ல, காதலை மறந்து வாழத் தொடங்கியவர்களுக்கும் இந்த படம் நெருக்கமாக உணரப்படும்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories