Published : Sep 18, 2024, 09:25 AM ISTUpdated : Sep 18, 2024, 09:28 AM IST
Rajinikanth vs Jayalalitha : நடிகர் ரஜினிகாந்த் தான் கருப்பு பணம் வாங்கியது உண்மை தான் என பிளாஷ்பேக் பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறி இருக்கிறார் அதைப்பற்றி பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு அரசியல் களத்தில் கொடுத்த வாய்ஸ் தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு ஜெயலலிதா உடனான மோதலே முக்கிய காரணம். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கடந்த 1991 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. இதையடுத்து 1992-ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய ரஜினியை கத்தீட்ரல் சாலையில் அவர் வந்த காரை தடுத்து நிறுத்திய போலீசார், ஜெயலலிதா செல்லும் வரை வாகனங்களை அனுமதிக்க முடியாது என மறுத்ததால், ஆத்திரமடைந்த ரஜினி காரில் இருந்து இறங்கி இருக்கிறார். இதனால் அங்கு சலசலப்பு நிலவி இருக்கிறது.
24
Rajinikanth, Jayalalitha
முதல்வருக்காக வாகனங்கள் நிறுத்தப்படுவது ரஜினிக்கு எரிச்சல் ஊட்டியது. இதனால் அவரை திரையில் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ரஜினி. குறிப்பாக அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா நிறைய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். அதையெல்லாம் விமர்சிக்கும் விதமாக தன்னுடைய படங்களில் அரசியல் நெடி பறக்க வசனங்களை வைத்து அதிர்ச்சி கொடுத்தார் ரஜினி.
பின்னர் 1996-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என முடிவெடுத்த ரஜினிகாந்த், அதிமுகவுக்கு எதிராக போட்டியிட்ட திமுக - த.மா.கா கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கினார். அப்போது ரஜினி எழுப்பிய வாய்ஸ் அந்த ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக ஜெயலலிதா, ரஜினி கருப்பு பணம் வாங்குவதாக விமர்சித்த நிலையில், அதற்கு சூப்பர்ஸ்டார் தன் பாணியில் பதிலடியும் கொடுத்தார்.
1996ம் ஆண்டு ரஜினி அந்த பேட்டியில் கூறியதாவது : “நான் கருப்பு பணம் வாங்கவே இல்லனு சொன்னா அது பொய். நான் கருப்பு பணம் வாங்கி இருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்னாடி வாங்கியிருக்கேன். அதன் பிறகு கருப்பு பணம் வாங்குவதை குறைத்துக் கொண்டேன். இப்போ சுத்தமா கிடையாது. சினிமாவில் இருந்துகொண்டே இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார் ஜெயலலிதா. என்னுடைய ரசிகர்கள் பாதிபேர் அதிமுகவில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இதை எப்படி சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என தெரியவில்லை.
இப்போ சினிமா துறையில் அதிக வருமான வரி கட்டும் நடிகர் என்றால் அது நான் தான். வருமான வரித்துறையிடமே அதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்ளோ ஆன பின்பும் ஜெயலலிதா மாறவில்லை. இப்போ மாறாதவர் இனி அவர் வாழ்க்கையில் எப்போதுமே மாறமாட்டார். முதலில் அவருக்கு பண வெறி இருந்தது. அது முடிந்த பின்னர் இப்போ பழி வெறி வந்திருக்கு.
44
Super Star Rajinikanth
ரஜினிகாந்த் பேச்சு இனி எடுபடாதுனு ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அதற்கு தமிழக மக்கள் வாக்குகள் மூலமா பதிலளிப்பார்கள். திமுக - த.மா.கா கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும்” என ரஜினிகாந்த் சொன்னதுபோல் அந்த தேர்தல் முடிவுகளும் அமைந்தது. அந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.
தேர்தலுக்கு பின்னர் பேட்டியளித்த மூப்பனார், வெற்றிக்கு ரஜினி முக்கிய காரணம் என வெளிப்படையாகவே அறிவித்தார். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திரைத்துறை சார்பில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தோல்விக்கு தானும் ஒரு முக்கிய காரணம் என்று ஓப்பனாக கூறினார்.