அனிமேஷனுடன் அதிரடி காட்டும் ஆர்யா...வெளியானது கேப்டன் பர்ஸ்ட் லுக்..

Kanmani P   | Asianet News
Published : Apr 04, 2022, 09:36 PM IST

பிரபல நடிகர் ஆர்யா தற்போது நடித்து வரும் கேப்டன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

PREV
18
அனிமேஷனுடன் அதிரடி காட்டும் ஆர்யா...வெளியானது கேப்டன் பர்ஸ்ட் லுக்..
CAPTAIN

கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியான எனிமி படத்தில்  விஷால் - ஆர்யா இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ஆர்யா போலீஸின் நுணுக்கங்கள் தெரிந்த வில்லனாக வந்து மாஸ் காட்டியிருந்தார். ஆனாலும் இந்த படம் ரசிகர்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை.

28
CAPTAIN

இதற்கிடையே ஆர்யாவும் அவரது மனைவி சயிஷாவும் இணைந்து டெடி படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை  சக்தி செளந்தர்ராஜன் இயக்கியிருந்தார். மாறுபட்ட கதைக்களத்தை கொண்ட இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்ததோடு படமும் ஓரளவு பாராட்டை பெற்றது.
 

38
CAPTAIN

இதையடுத்து நடிகர் ஆர்யா தற்போது கேப்டன்  படத்தில் நடித்து முடித்துள்ளார்.   இந்த படத்தை ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இயக்குகிறார்.  

48
CAPTAIN

இந்த படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.  இதில் நாயகியாக  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, இவர்களுடன் சிம்ரன், தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

58
CAPTAIN

கேப்டன் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டீ.இமான் பிஜிஎம் அமைத்துள்ளார். அதோடு கடந்தாண்டு  முதல் பார்வை போஸ்டரையம் இவர் தான் வெளியிட்டிருந்தார்.

68
CAPTAIN

ஆர்யாவின் பிறந்தநாளான அன்று இசையமைப்பாளர் டீ.இமான் வெளியிட்ட கேப்டன் போஸ்டரில் படத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 

78
CAPTAIN

கடந்த  சில வாரங்களுக்கு முன்பு கேப்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக பெற்று வருகின்றன. 

88
CAPTAIN

இந்நிலையில் கேப்டன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 4 -ம் தேதி மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படி இன்று வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories