குறிப்பாக வெளிநாடுகளில் படபிடிப்பு நடத்துவது தற்பொழுது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே பெரிய அளவில் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், வெளிநாடுகளுக்கு சென்று படமாக்கப்பட்ட படங்களை உருவாக்கி வெளியிட்டவர்கள் தான் மக்கள் திலகமும், நடிகர் திலகமும். அந்த வகையில் 1973 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படம் வெளிநாட்டில் படபடப்பு நடத்தப்பட்டு வெளியான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விழா கண்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியிலும், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. 1973 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சுமார் 4.2 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.