என் மகன் பொம்பள பித்தனாக, போதை - உடலுறவுக்கு அடிமையாக இருக்கணும்! விபரீதத்தில் முடிந்த பிரபல நடிகரின் ஆசை!

First Published | Aug 18, 2023, 11:25 PM IST

தன்னுடைய மகனுக்கு மூன்று அல்லது நான்கு வயதாக இருக்கும்போது, ​​அவர் புகைபிடிக்கலாம், போதைப்பொருள் எடுத்து கொள்ளலாம்,  நான் செய்யாத அனைத்தும் அவன் செய்ய வேண்டும் என வினோதமான ஆசையை விளையாட்டாக வெளிப்படுத்தி விபரீதத்தில் சிக்கிய நடிகரின் த்ரோ பேக் பேச்சு குறித்து இதில் பார்க்கலாம்.
 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆர்யா கான் சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. மகன் கைது செய்த விவரம் பற்றி அறிந்து, ஸ்பெயினில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் மும்பை திரும்பி நிலையில், மகன் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வரை, தன்னை தானே வீட்டுக்குள் முடக்கி கொண்டார் ஷாருக்கான். பல சர்ச்சைகளுக்கு பின்னரே ஒருவழியாக, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
 

இந்நிலையில் ஷாருக்கான் மற்றும் கௌரி கான் இருவரும், ஆர்யன் கான் பிறந்து இரண்டு மாதங்கள் ஆன போது, கொடுத்த பேட்டியில்... ஷாருக்கான் நகைச்சுவையாக கூறிய விஷயம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது. 

ஷாருக்கான் 'ஜவான்' படத்தின் தமிழ்நாடு - கேரளா திரையரங்கு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
 

Tap to resize

அதாவது தன் மகன் பெண் பித்தனாக இருக்கலாம். விரும்பும் அளவு புகைக்கலாம். பெண்களுடன் உறவு கொள்ளலாம். அப்படித்தான் நாங்கள் வளர்க்கப்போகிறோம் என்று ஷாருக்கானும் , அவரது மனைவி கவுரியும் கூறி இருந்தனர். இதை கேட்டு அவர்களை பேட்டி எடுத்துக்கொண்டிருந்த நடிகை சிமி ஒரு நிமிடம் அதிர்ச்சியானார்.
 

அதாவது நடிகை சிமி கரேவாலுடன், ஷாருக்கானும், கவுரி கானும், 1997-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அப்போது சில நகைச்சுவையான பதில்களை அளித்தார் ஷாரூக்கான். அந்த நேர்காணலில், ஷாரூக், தனது மகனான ஆர்யான் கான் பிறந்து சில மாதங்களே ஆன நிலையில், தனது மகனை எப்படி வளர்ப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு, கான் கூறினார், "அவனுக்குக்கு மூன்று அல்லது நான்கு வயதாக இருக்கும்போது, ​​அவர் பெண்களைப் பின்தொடர்ந்து புகைபிடிக்கலாம், போதைப்பொருள் புகைக்கலாம்,  பெண்களுடன் உறவு கொள்ளலாம், பெண் பித்தனாக இருக்கலாம் " என்று கூறினார். 

அசோக் செல்வனுக்கு இந்த பெண் என்ன உறவு என்று தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!
 

சிமி ஆச்சரியமாக கானிடம், "அவருக்கு மூன்று வயதாகும்போதேவா?" எனக் கேட்டார். உடனே குறிக்கிட்ட கவுரிகான், ஆரியன் 2 மாதங்கள் இருந்த போது இப்போது இல்லை என்று கூறினார், ஷாருக் கான் நகைச்சுவையாக, ’நான் செய்யாத அனைத்தையும் என் மகன் செய்ய வேண்டும்’’என்று கூறினார். 
 

அன்று ஷாருகான் நகைச்சுவையாக சொன்னது, விபரீதமாக மாறி விட்டதாக... இந்த வீடியோவை வெளியிட்டு ஷாருக்கான் போதை மருந்து பார்ட்டியில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட போது கூறி வந்தனர். மேலும் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், பெண் தோழிகளுடன் பார்ட்டி செய்த புகைப்படங்களையும் தேடி... தேடி வெளியிட்டு வைரலாக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி சீரியல்களில் டாப் 10 TRP ரேட்டிங்கை கைப்பற்றிய சீரியல்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது!
 

Latest Videos

click me!