ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் யார்? கண்டிப்பா ரஜினி, கமல், அமிதாப் இல்ல..

First Published Jan 6, 2024, 4:29 PM IST

90களில் ஒரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

திரைப்படத் தயாரிப்பின் பொருளாதாரம் என்பது எப்போதும் ஹீரோவைச் சுற்றியே இருக்கிறது. மிகப்பெரிய படங்கள் வெளியாகும் போது அது ஆக்‌ஷன் படமாக இருந்தாலும் சரி, அல்லது காதல் ரொமான்ஸ் படமாக இருந்தாலும் சரி அந்த படத்தின் நடிகரின் பெயரை பயன்படுத்தியே விற்கப்படுகிறது. இந்த நடிகர் படம் என்றால் நிச்சயம் இத்தனை கோடி வசூல் ஈட்டும் என்ற கணிப்பு தயாரிப்பாளர்களுக்கு இருக்கும். ஆனால் அதே நேரம் இயக்குனருக்காகவும் சில படங்கள் வெற்றி பெறும் என்றாலும் அவை மிக மிக குறைவு..

இதுவே இந்தியாவில் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் என்பது கனவாகத் தோன்றிய காலம் ஒன்று இருந்தது. 

ஆம்,. 1992-ல். அமிதாப் பச்சன் பாலிவுட்டின் சுப்பர்ஸ்டாராக இருந்தார். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை, ரஜினிகாந்த் தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக உறுதிப்படுத்திக் கொண்டார். ஆனால், அப்போது வரை இந்த இருவரும் ஒரு படத்துக்கு 1 கோடி சம்பளம் வாங்கவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமாவில் ஒரு ஹீரோ அப்போது முதன்முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கினார். அவர் வேறு யாருமில்லை நடிகர் சிரஞ்சீவி தான். ஆபத்பாந்தவுடு படத்திற்காக மெகாஸ்டார் சிரஞ்சீவி ரூ.1.25 கோடி சம்பளம் பெற்றதன் மூலம், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகரானார். அப்போது அமிதாப் பச்சன் சுமார் ரூ.90 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த காலக்கட்டத்தில் சிரஞ்சீவி இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாகப் பாராட்டப்பட்டார். தி வீக் பத்திரிக்கை செப்டம்பரில் அவரைப் பற்றிய அட்டைப்படக் கதையை வெளியிட்டது: அவரின் ஆபத்பாந்தவுடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் சிரஞ்சீவியை தெலுங்குத் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் உச்ச நடிகராக நிலைநிறுத்தியது, அடுத்த 10 ஆண்டு பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

எனினும் 2008 ஆம் ஆண்டில், அரசியலில் கவனம் செலுத்துவதற்காக திரைப்படங்களை விட்டு விலகுவதாக அறிவித்தார் சிரஞ்சீவி. இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்படி கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டின் வெற்றிகரமான கைதி எண் 2017 என்ற படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதன்பிறகு பல பிளாக்பஸ்டர்களை வழங்கியுள்ளார்.

Kamalhaasan

இதனிடையே 80, 90களில் உச்சத்தில் இருந்த நடிகர் கமல்ஹாசன் 1994 இல் ரூ. 1 கோடி சம்பளம் பெற்றார். இதை தொடர்ந்து நடிகர் ரஜினியும் விரைவிலேயே ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினால் அமிதாப் பச்சன் 1996 ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற தொடங்கினார்.

நடிகைகளை பொறுத்தவரை 1996 ஆம் ஆண்டில், ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை ஸ்ரீதேவி பெற்றார்.

பின்னர். அடுத்த சில ஆண்டுகளில், பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெறத்தொடங்கினர்.. 

click me!