நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவரை இழந்து வாடும் நடிகை மீனாவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
திருமணத்துக்கு முதலில் நோ சொல்லி பின்னர் சம்மதித்தது குறித்து நடிகை மீனா, குஷ்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார். அந்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகை மீனா கூறியதாவது : எனக்கும் சாகருக்கும் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் கல்யாணம் நடந்தது. முதலில் அவரிடம் பேச எனக்கு சவுகரியமாக இல்லை.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மே மாத வாக்கில் பேசத்தொடங்கினோம். பின்னர் ஜாதகம் பார்த்தபோது, இவர் ஓகே தான் ஆனால் இதைவிட நல்ல வரன் வருமே என ஜோசியர் சொல்லிவிட்டார். அவர் அப்படி சொன்னதும் எனக்கும் சந்தோஷம் தாங்கல, உடனே அவர் வேண்டாம் என்றேன். அவரிடமே சென்று குட் பை சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்து சொல்லிட்டு பை-னு சொல்லிட்டாரு.
அதன்பின்னர் எனது அத்தை வந்து, ஜோசியர் சொன்னால் உடனே வேண்டாம் என்று சொல்லிவிடுவதா என சத்தம் போட்டார். அதன்பிறகு மீண்டும் சாகர் குடும்பத்துடன் பேசி எங்களது திருமணம் நடந்தது. எங்களுக்குள் சண்டை வந்தால் முதலில் வந்து பேசுவது சாகர் தான்” என சுவாரஸ்ய தகவலை மீனா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
55
திருமணத்திற்கு பின்னரும் நடிகை மீனா சினிமாவில் சக்சஸ்புல் நடிகையாக வலம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது சாகர் தான். அன்பான கணவர், அழகான குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வந்த மீனாவிற்கு சாகரின் மரணம் பேரிழப்பாகவே உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.