சூப்பர்ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை... மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு பிரபலங்கள் கண்ணீர்மல்க அஞ்சலி

Published : Jun 29, 2022, 02:25 PM IST

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

PREV
14
சூப்பர்ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை... மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு பிரபலங்கள் கண்ணீர்மல்க அஞ்சலி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. மீனாவை போன்றே அவரது மகள் நைனிகாவும் சினிமாவில் தெறி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்.. நடிகை மீனாவின் கணவர் எப்படி இறந்தார் தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய பரபரப்பு தகவல்

24

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் விரைவில் குணமடைந்தாலும், அதன் பாதிப்புக்கு பின் அவருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பிரச்சனை தீவிரமானது. இதனால் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார் வித்யாசாகர்.

இதையும் படியுங்கள்.. மீனாவின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த திருமணம் - அவரின் ரீ-எண்ட்ரியும்... வித்யாசாகரின் பங்களிப்பும்

34

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற ரஜினி.. அங்கிள் என கதறி அழுத மீனா- கலங்கிப்போன சூப்பர்ஸ்டார்

44

அந்த வகையில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரகுமான், பாடகர் கிரிஷ், நடிகை குத்பு, நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் நாசர், நடிகர் சரத்குமார், டான்ஸ் மாஸ்டர் கலா, காயத்ரி ரகுராம், அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

click me!

Recommended Stories