காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்கு மிக மிக வேதனை படுகிறேன்...! இயக்குனர் ஹரி ஆதங்கம்...

First Published Jun 28, 2020, 3:59 PM IST

காவல் துறை அதிகாரிகளை பெருமை படுத்தும் விதமாக 5  படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த, இயக்குனர் ஹரி, சாத்தன் குளம் பிரச்சனையால் வேதனையோடு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

காவல் துறை அதிகாரிகளை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், அனைவருடைய நினைவிற்கு முதலில் வருவது, சூர்யாவின் சிங்கமும் விக்ரமின் சாமி திரைப்படமும் தான்.
undefined
இந்த படங்கள் மூலம், போலீஸ் அதிகாரிகளை மிகவும் உயர்வாக சித்தரித்து, காவல் துறை உங்கள் நண்பன் என்கிற கருத்தை படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் பதிய வைத்தவர் இயக்குனர் ஹரி.
undefined
சூர்யாவை போலீசாக நடிக்க வைத்து, இவர் இயக்கிய சிங்கம், சிங்கம் 2 , சிங்கம் 3 ஆகிய மூன்று பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட் ஆனது
undefined
அதே போல் நடிகர் விக்ரமை வைத்து இவர் இயக்கிய சாமி, சாமி 2 ஆகிய படங்களுக்கும், முழுக்க முழுக்க போலீஸ் அதிகாரிகளை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான்.
undefined
இந்நிலையில், சாத்தன் குளத்தில் அரசு அறிவித்த நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததற்காக, அப்பா - மகன் இருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
undefined
பின்னர் அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
undefined
இதனிடையே, ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும், அவரது மகன் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும் இறந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய போலீசாருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தொடர்ந்து பிரபலங்கள், அரசியல் வாதிகள், விளையாட்டு வீரர்கள், மற்றும் மக்கள் என அனைவரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
undefined
அந்த வகையில் தற்போது இயக்குனர் ஹரி, சாத்தான் குளம் சம்பவம் போல், இனி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடைபெறக்கூடாது. அதற்கு ஒரே வழி, சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்குவதே... காவல் துறையில் உள்ள சிலரின் இந்த அது மீறல் காவல்துறையையே களங்கப்படுத்தியுள்ளது. காவல் துறையை பெருமை படுத்தி 5 படங்கள் எடுத்ததற்கு மிக மிக வேதனை படுகிறேன் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
undefined
click me!