தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது.
27
முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
37
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் (BiggBoss 5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
47
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
57
அந்த வகையில் கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். அதன்படி குறைந்த வாக்குகளை பெற்ற வருண் அக்ஷரா ஆகியோர் எவிக்ட் ஆகினர்.
67
ஜோடியாக எவிக்ட் ஆன இருவரும், தற்போது ஜோடியாக வலம் வருகின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள், ஒருவேள அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருக்குமே என சந்தேகிக்கின்றனர்.
77
இந்த சர்ச்சை அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது எழுந்தது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த வருண், அக்ஷரா, தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறி இருந்தனர்.