நடிகை குஷ்பு:இயக்குனர் சுந்தர்.சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் சந்தோஷமாக வாழ்த்து வருகிறார். திருமணமத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யா சாகர் என்பவரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்கிற ஒரே ஒரு மகள் உள்ளார். விஜய்யுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
ரோஜா:இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒன்று மகள் உள்ளனர்.
ரேகா:நடிகை ரேகா ஜார்ஜ் ஹாபிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார்.
ரம்பா:இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா, இடையில் இருவருக்கு சில கருத்து வேறுபாடு வந்த போதும், உண்மையான காதல் அவர்களை பிரிய விடாமல் மீண்டும் வாழ்க்கையில் இணைத்து. இரு மகள் ஒரு மகன் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
கௌதமி:நடிகை கௌதமி சந்தீப் பாத்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து இந்தியா வந்தார். சில காலம் நடிகர் கமலஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார்
சிம்ரன்:அஜித், விஜய்க்கு அசால்டாக ஜோடி போட்டு நடித்த நடிகை சிம்ரன் நெருங்கிய உறவினர் தீபக் பாகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
அசின்:நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் ஓனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்கிற ஒரே ஒரு மகள் உள்ளார்.
லைலா:நிக்கோலஸ் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை லைலாவிற்கு இரு மகன்கள் உள்ளனர்.
மாளவிகா:சுமேஷ் மேனன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை மளவிகாவுக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ஜெனிலியா:பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட, நடிகை ஜெனிலியாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.