என் தப்பு தான்... வனிதாவின் திருமணம் பற்றி பேசி வாங்கி கட்டிக்கொண்டு... மன்னிப்பு கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்!

First Published Jul 3, 2020, 5:56 PM IST

லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா திருமணம் பற்றி கூறிய கருத்துக்கு, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள், இது டிவி ஷோ இல்லை என பதிலளித்தவரிடம் தற்போது மன்னிப்பு கேட்பதாக ட்விட் செய்துள்ளார் லட்சுமி.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தனது பெற்றோரின் திருமண நாளான 27ம் தேதி அன்று பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார்.
undefined
கொரோனா லாக்டவுன் காரணமாக விஷ்வல் எடிட்டர் பீட்டர் பாலை வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக கரம் பிடித்தார். திருமணத்தின் போது வனிதாவும், பீட்டர் பாலும் லிப்லாக் கொடுத்துக்கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
undefined
பலரும் 40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதை விமர்சித்தாலும், அவருடைய மகள்கள், ரசிகர்கள் என பெரும்பாலானோர் வனிதாவின் இந்த முடிவுக்கு துணை நின்றனர்.
undefined
திருமணமான அடுத்த நாளே வனிதா வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. பீட்டரின் முதல் மனைவி ஹெலன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலும் தானும் பிரிந்து வாழ்த்து வரும் நிலையில், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால், வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் குற்றச்சாட்டினார்.
undefined
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீட்டர் பால் தன்னை திருமணம் செய்து கொண்டது ஹெலனுக்கு தெரியும் என்றும், தன்னிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் வனிதா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
undefined
இந்நிலையில் வனிதாவின் 3வது திருமண விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் , “இப்பொழுது தான் அந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார்.
undefined
மேலும் பல கஷ்டமான சூழ்நிலைகளை கடந்து வந்தவர். அவற்றை வெளிப்படையாக பேசியவர். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என நினைத்தேன். அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த பிரச்சனையை அவர் கவனிக்காமல் விட்டது வருத்தமளிக்கிறது என்றும் மற்றொரு பதிவை ட்வீட் செய்திருந்தார்.
undefined
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா, நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எவ்வித கருத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என கடுப்பாக பதிலளித்துள்ளார்.
undefined
வனிதாவின் இந்த பதிலடி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இதற்க்கு மன்னிப்பு கேட்டு ட்விட் ஒன்றை போட்டுள்ளார், லட்சுமிராமகிருஷ்ணன்.
undefined
அதில், வனிதா விஜயாகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் கமெண்ட் செய்திருக்க கூடாது. அதை பெரிதாக்கி தெருச்சண்டை போன்று ஆக்கிய மீடியாவுக்கு நன்றி. வனிதா உங்களை பற்றி போட்ட அணைத்து பதிவையும் நீக்கி விட்டேன். நீங்கள் சொன்னது போலவே என்னுடைய உண்மையான கடமை, பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு குரல் கொடுப்பது தான் என கூற ஜெயப்ரியாவிற்கு நீதி வேண்டும் என தெரிவித்துள்ளார்.
undefined
click me!