நடிகர் விஜயின் விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், மகளிர் தின விழாவில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "அந்த அளவுக்கு வொர்த் இல்ல" என்ற அவரது கருத்தை நடிகை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி தற்போது பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. பல ஆண்டுகளாக வெற்றி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த விஜய், சமீபத்தில் தனது அரசியல் பயணத்தை அறிவித்ததன் பின்னர் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) மூலம் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதாக அறிவித்தார், இனி திரைப்படங்களுக்கு விடை கொடுக்க உள்ளார் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், அரசியல் வருகை குறித்து பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியது.
26
விஜயின் குடும்ப வாழ்க்கை
இந்த சூழ்நிலையில், விஜயின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் கடந்த மாதம் 24ஆம் தேதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இந்த விவகாரம் மாறியுள்ளது.
36
விஜய் சங்கீதா விவாகரத்து
இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், விவாகரத்து தொடர்பாக விஜய் தனது மனைவிக்கு சுமார் ரூ.250 கோடி அளவுக்கு பராமரிப்பு தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இது பரவலாக பேசப்படுகிறது. மேலும், சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவில், விவாகரத்து வழக்கு முடிவடையும் வரை தாங்கள் தற்போது வசிக்கும் வீட்டிலேயே தங்க அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில், நடிகர் விஜய்க்கு மற்றொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை விஜய் அல்லது அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் திரைப்படம் உலகிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் மற்றும் நடிகர் விஜய், சமீபத்தில் சமூக தளங்களில் பேசப்பட்டு வரும் தனது தனிப்பட்ட சர்ச்சையை நேரடியாக குறிப்பிடவில்லை.
56
மகளிர் தின மேடையில் விஜய் பேச்சு
ஆனால், அந்த விவகாரம் காரணமாக ரசிகர்கள் மனவேதனை அடைய வேண்டாம் என்று அவர் கூறினார். “இப்போது ஓடிக்கொண்டிருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக நீங்கள் மனவேதனை அடைவதை நான் விரும்பவில்லை. அதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஹர்ட் ஆகாதீர்கள்… அந்த அளவுக்கு ‘வொர்த்’ இல்ல” என விஜய் தனது உரையில் தெரிவித்தார். விஜயின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக சிலர் அவரது பேச்சை ஆதரித்தாலும், மற்றொரு தரப்பினர் அதனை விமர்சித்து கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
66
விஜயை விமர்சித்த சனம் ஷெட்டி
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி விஜயின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில் அவர், “என்னது... ‘வொர்த்’ ஏ இல்லையா? இதற்கு பெண்கள் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த கருத்தை கேட்டு விரக்தி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். சனம் ஷெட்டியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிலர் அவரது கருத்தை ஆதரித்து பேச, சிலர் விஜயை ஆதரித்து பதிலடி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.