எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அவர் இருக்கும் இடத்துக்கு ஆலிவர் தேவசகாயம் வந்துள்ளார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும், சக்தியும் ஜோடியாக டூர் போக முடிவெடுத்து, இருவரும் கொடைக்கானலுக்கு கிளம்புகிறார்கள். அவர்கள் அங்கு செல்வது ஆதி குணசேகரன், கதிர், ஞானம் ஆகியோருக்கு தெரியக்கூடாது என்பதற்காக, அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு கிளம்பப் பார்க்கிறார்கள். ஆனால் ஞானம் துருவி துருவி கேள்வி கேட்டதால், தாங்கள் வெளியூர் போகும் உண்மையை சொல்லிவிடுகிறார் ஜனனி. இதையடுத்து இருவரும் ஜோடியாக காரில் கிளம்புகிறார்கள். இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
26
தேவசகாயம் ரிட்டர்ன்ஸ்
இன்றைய எபிசோடின் தொடக்கத்திலேயே ஆலிவர் தேவசகாயத்தை தான் காட்டுகிறார்கள். அவர் அங்குள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருக்கிறார். அங்கு வரும் தன்னுடைய ஆள் ஒருவரிடம், புது பாஸ்போர்ட் என்ன ஆச்சு என விசாரிக்கிறார். அந்த நபர், தற்போது கொடைக்கானலில் எல்லா இடத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடப்பதால், உங்களுக்கு இப்போதைக்கு புது பாஸ்போர்ட் கிடைப்பது கஷ்டம் என கூறுகிறார். அதுமட்டுமின்றி இப்போதைக்கு நீங்க வெளிய போறது டேஞ்சர் தான் எனவும் சொல்கிறார். உடனே டென்ஷன் ஆன ஆலிவர், என்னைய பயந்து ஒளிஞ்சிருந்து சாக சொல்றியா, நான் ஒரு போராளி என கூறுகிறார்.
36
ஜனனியை பழிவாங்காம விடமாட்டேன்
ஜனனியும் மதிவதினியும் தப்பிச்சு போனப்பவே நீங்க வெளிநாட்டுக்கு சென்றிருக்கலாமே சார் என டேவிட் கேட்க, அப்போ போலீஸ் என்னைய வலைவீசி தேடிக்கிட்டு இருந்தாங்க, அதனால தான் நான் இங்கயே செட்டில் ஆகிட்டேன். இங்க என்னைய யாரும் சந்தேகப்பட மாட்டாங்க. ஏனெனில் என்னுடைய முகம் ஜனனி மற்றும் மதிவதினிக்கு மட்டும் தான் தெரியும். என் உருவம் மத்தவங்களுக்கு தெரியாது அது எனக்கு இருக்குற பெரிய அட்வாண்டேஜ், அதைவைத்து தான் நான் இங்கிருந்து வெளியேறனும் என கூறுகிறார். நான் அந்த ஜனனியை கொல்லாம விடமாட்டேன் என கூறுகிறார்.
மறுபுறம் வீட்டில் உள்ள ஆதி குணசேகரன், தன்னுடைய தம்பிகளிடம் உங்களிடம் நான் நம்முடைய கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒப்படைக்கிறேன் என கூறுகிறார். அதுமட்டுமின்றி மற்றுமொரு முக்கிய முடிவு எடுத்திருப்பதாகவும் அதைப்பற்றி நாளை உங்களிடம் கூறுகிறேன் என்றும் சொல்கிறார். அதோடு தன்னுடைய தம்பிகளிடம், நீங்கள் இருவரும் உங்களின் மனைவிமார்களின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என கூறுகிறார். இந்த கம்பெனி பொறுப்பு உங்களுக்கு கிடைத்தாலும் அதைப்பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாது அதனால் நீங்க அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சு நடந்துக்கோங்க என சொல்கிறார்.
56
பாடம் எடுக்கும் நந்தினி மற்றும் ரேணுகா
இதையடுத்து கீழே செல்லும் கதிர் மற்றும் ஞானம் தங்களுடைய மனைவிகளிடம் இதில் ஜிஎஸ்டி உள்பட பல சமாச்சாரம் இருக்கு, அதை எப்படி கட்டுவது என்பது பற்றி தங்களுக்கு சொல்லிக் கொடுக்குமாறு கேட்கிறார்கள். அவர்கள் இருவருமே தனித்தனியாக தங்கள் கணவன்மார்களை அழைத்துச் சென்று பாடம் எடுக்கிறார்கள். பின்னர் இதையெல்லாம் படிக்கணும் என சொல்லி அவர்களை படிக்க வைக்கிறார்கள். மறுபுறம் விசாலாட்சியும் தனது மருமகள்களிடம் நீங்களும் இதையெல்லாம் கத்துக்கோங்க டி உங்களுக்கு எதிர்காலத்தில் இது பயனளிக்கும் என கூறுகிறார்.
66
ஜனனியை நெருங்கிய குணசேகரன்
தற்போது கொடைக்கானல் சென்றுள்ள சக்தி மற்றும் ஜனனி ஒரு இடத்தில் காரை நிறுத்துகிறார். சிக்னல் இல்லாமல் மேப் ஒர்க் ஆகவில்லை என்பதால், தான் இறங்கி சென்று டவர் கிடைக்கும் இடத்தில் பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு செல்கிறார். அப்போது ஜனனி காரிலேயே படுத்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து தேவசகாயம் ஜனனியின் காருக்கு பின்னால் வந்து தன்னுடைய காரை நிறுத்திவிட்டு நடந்து வருகிறார். அவர் ஜனனி காரின் அருகே வந்தபோது இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அவர் ஜனனியை பார்த்து அவரை மீண்டும் கடத்தினாரா? இல்லையா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.