மனோஜின் முட்டாள்தனமான பிளான்... சல்லி சல்லியாய் உடைக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Mar 09, 2026, 10:22 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு எதிராக ஆதாரத்தை திரட்ட, தன்னுடைய நண்பன் சந்தோஷை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் மனோஜ். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி, ஸ்ருதி மற்றும் மீனா ஆகிய மூன்று மருமகள்களுமே வீட்டை விட்டு சென்றுவிட்டதால் வீடே வெறிச்சோடிக் கிடக்கிறது. இதில் ரோகிணி மற்றும் மீனாவை விஜயா வீட்டை விட்டு துரத்திவிட்டுள்ளார். ஸ்ருதி, ரவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் வீட்டை விட்டு சென்று தன்னுடைய அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். மனைவிகள் வீட்டில் இல்லாததால் மகன்களும் வீட்டில் தங்காமல் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறார்கள். இதனால் விஜயா மட்டும் வீட்டில் தனிமரமாக இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
பார்வதியிடம் ஆதங்கப்பட்ட விஜயா

விஜயா தன்னுடைய தோழி பார்வதி வீட்டிற்கு சென்று, அவரிடம் தான் தனியாக இருந்ததை பற்றி சொல்லி ஃபீல் பண்ணுகிறார். அதற்கு இந்த தனிமைக்கு நீ தான் காரணம் என சொல்கிறார் பார்வதி. நான் தனிமையில் இருந்தபோது உன்னை தான் நினைத்து பார்த்தேன். நமக்கு ஒரு நாள் தனி்மையில் இருப்பதே இப்படி இருக்கிறதே, நீ இத்தனை ஆண்டுகள் எப்படி தான் தனிமையில் இருக்கிறாய் என எண்ணிப் பார்த்தேன் என கூறுகிறார் விஜயா. தனிமை மிகக் கொடுமையானது என அவர் சொல்லிக் கொண்டிருக்கையில், மீனாவை மீண்டும் வீட்டுக்கு வர வை என பார்வதி சொல்ல, அதற்கு முடியவே முடியாது என கூறிவிடுகிறார் விஜயா.

35
மனோஜுக்கு பொண்ணு பார்க்கும் விஜயா

அந்த நேரத்தில் ஒரு ஜோசியர் அங்கு வருகிறார். அவரை நான் தான் வரச் சொன்னேன் என விஜயா சொல்ல, எதற்காக என பார்வதி கேட்டதற்கு, மனோஜுக்கு ஒரு நல்ல வரன் இருக்கு என சொன்னார் அதனால் தான் வரச்சொன்னேன் என கூறுகிறார் விஜயா. இவரை உன்னுடைய வீட்டிற்கே வரச் சொல்லி இருக்கலாமே என பார்வதி சொல்ல, அங்கு என் வீட்டுக்கார் இருப்பார். அவர் மனோஜுக்கு இன்னும் டைவர்ஸே கிடைக்கல அதுக்குள்ள என்ன அவசரம்னு கேட்பார். அதனால் தான் அவரை இங்கு வரச் சொன்னேன் என விஜயா கூறுகிறார்.

45
முத்துவின் மாஸ் சம்பவம்

இதையடுத்து மீனாவின் பூக்கடைக்கு தேவையான பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டு முத்து காரில் செல்கிறார். அந்த நேரம் பார்த்து ஸ்ருதியும் அங்கு வர, அவரிடம் நீ மீனாவுக்கு சப்போர்ட்டாக இருப்பதற்கு நன்றி என கூறுகிறார் முத்து. இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கையில், அருகில் உள்ள அபார்ட்மெண்டில் வசிக்கும் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு போக்கு காட்ட அவரை யாராலும் தடுக்க முடியாமல் போகிறது. அவரை காப்பாற்ற வேண்டும் என அவரது பெற்றோர் துடிக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து ஹீரோ போல் மாஸாக செயல்பட்டு அந்த இளைஞர் கையில் இருந்த கத்தியை வாங்கி அவரை காப்பாற்றுகிறார் முத்து. அவரை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

55
ரோகிணியிடம் சிக்கும் மனோஜ்

மறுபுறம் மனோஜ் ரோகிணிக்கு எதிராக ஆதாரத்தை திரட்ட தன்னுடைய நண்பன் சந்தோஷ் உடன் களமிறங்கி இருக்கிறார். சந்தோஷ் ரோகிணியை காதலிப்பது போல் நடிக்க, அதை மனோஜ் மறைந்திருந்து வீடியோ எடுக்கிறார். சந்தோஷிடம் தான் யோசித்து சொல்வதாக கூறிவிட்டு செல்கிறார் ரோகிணி. இதன்பின்னர் வீடியோ எடுத்த மகிழ்ச்சியில் சந்தோஷ் உடன் சென்று மனோஜ் பேசிக் கொண்டிருக்க, அதை ரோகிணி பார்த்துவிடுகிறார். இதெல்லாம், உன் பிளான் தானா, இரு உன்னை சிக்க வைக்கிறேன் என குடுகுடுப்பு காரன் ஒருவனிடம் பணம் கொடுத்து, சீக்ரெட்டாக ஒரு விஷயத்தை சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories