Valimai Latest News: முடியவே முடிடியாது... 'வலிமை' படத்தில் பயற்றியதற்கு சம்பளம் வாங்க மறுத்த பிரபல இயக்குனர்!

Published : Jan 02, 2022, 06:43 PM IST

பிரபல இயக்குனர் ஒருவர் அஜித் (Ajith) நடித்து முடித்து வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள 'வலிமை' (valimai movie) படத்தில் பணியாற்றியதரக்கு சம்பளம் வாங்க மறுத்துவிட்டதாக இயக்குனர் எச்.வினோத் (H Vinoth) கூறியுள்ளார்.  

PREV
15
Valimai Latest News: முடியவே முடிடியாது... 'வலிமை' படத்தில் பயற்றியதற்கு சம்பளம் வாங்க மறுத்த பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர் அஜித் நடித்து முடித்து வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள 'வலிமை' படத்தில் பணியாற்றியதரக்கு சம்பளம் வாங்க மறுத்துவிட்டதாக இயக்குனர் எச்.வினோத் கூறியுள்ளார்.

 

25

அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்திலும், போனி கபூர் தயாரிப்பிலும் நடித்துள்ள திரைப்படம் 'வலிமை' . சுமார் 2 வருடமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகிறது. மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரும், ஹாலிவுட் தரத்தில் இருந்தது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

 

35

மேலும் இயக்குனர் எச்.வினோத் அவ்வப்போது இந்த படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்... தற்போது வலிமை படத்தில் பணியாற்றியதற்காக பிரபல இயக்குனர் சம்பளம் பெறவில்லை என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.

 

45
valimai trailer

'வலிமை' படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்த, 'அம்மா பாட்டு', மற்றும்  'நாங்க வேற மாதிரி' ஆகிய இரண்டு பாடல்களை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் அதற்கு சம்பளம் வாங்க மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் எச்.வினோத். மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், போலீஸ் உடை அணியாமல் நடித்துள்ளதாகவும் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

55

தற்போது விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி நடிக்கும், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி முடித்துள்ளார். சமந்தா மற்றும் நயன்தாரா முன்னணி என இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories