Akshara and Varun: வாவ் வேற லெவல்.. ஒரே நாளில் பிக்பாஸ் வெளியேற்றிய... அக்ஷரா - வருணுக்கு அடித்த ஜாக்பார்ட்!

Published : Jan 02, 2022, 05:42 PM IST

பிக்பாஸ் (biggboss tamil 5) வீட்டில் உள்ளே இருந்த போது முத்த சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா - வருண் (Akshara and Varun) இருவரும் கடந்த வாரம் ஒன்றாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வந்த வேகத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்கள்.  

PREV
18
Akshara and  Varun: வாவ் வேற லெவல்.. ஒரே நாளில் பிக்பாஸ் வெளியேற்றிய... அக்ஷரா - வருணுக்கு அடித்த ஜாக்பார்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்ததும் யாருக்கும் பட வாய்ப்புகள் உடனே கிடைத்து விடுவது இல்லை, வெளியே வந்து சில போராட்டங்களுக்கு பிறகே பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்கள்.

 

28

இவ்வளவு ஏன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனதில் இடம்பிடித்து டைட்டில் வின்னர் ஆனவர்களுக்கு கூட இன்னும் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளது என்றே கூறலாம்.

 

38

ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அக்சரா மற்றும் வருண் ஆகிய இருவரும் வெளியே வந்த வேகத்தில் அடுத்தடுத்து படவாய்ப்புகளை ஜோடியாகவே கைப்பற்றி வருகிறார்கள்.

 

48

இவர்கள் இருவரும்  பிக்பாஸ் வீட்டில் இருந்த போது மிகவும் சிறப்பாக விளையாடினார்கள் என்பதும் குறிப்பாக அவர்கள் டாஸ்க்கில் முழு ஈடுபாட்டை செலுத்தினார்கள் என்பதும் தெரிந்ததே.

 

58

டாஸ்க் சரியாக விளையாடாமல் வெறும் சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் பலர் வீட்டில் இருக்கும் போது நன்றாக டாஸ்க் விளையாடியவர்கள் வெளியேற்றப்படுவதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

68

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அக்சரா, வருண் ஆகிய இருவரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

78

அக்சரா - வருண் இணைந்து நடிக்கும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற தகவல்கள் அதிகார பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

88

 பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, காதல் சர்ச்சையில் சிக்கிய இருவரும்... பின்னர் தங்களுக்குள் காதல் இல்லை நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாக தெரிவித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories