நேற்று வாணி ஜெயராம்... இன்று டி.பி.கஜேந்திரன் - அடுத்தடுத்த மரணங்களால் திரையுலகினர் அதிர்ச்சி

Published : Feb 05, 2023, 08:11 AM ISTUpdated : Feb 05, 2023, 08:35 AM IST

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

PREV
14
நேற்று வாணி ஜெயராம்... இன்று டி.பி.கஜேந்திரன் - அடுத்தடுத்த மரணங்களால் திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. இவர் தமிழில் பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஆவார். அதுமட்டுமின்றி ஏராளமான தமிழ் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் கஜேந்திரன். 

24

நடிகர் கஜேந்திரனின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களில் பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத், பாடகி வாணி ஜெயராம் ஆகியோர் மரணமடைந்த நிலையில், இன்று கஜேந்திரன் உயிரிழந்துள்ளது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... யோகி பாபு படத்திற்கு வாணி ஜெயராம் பாடிய கடைசி பாடல்.! படக்குழுவினர் கண்ணீருடன் பகிர்ந்த தகவல்..!

34

டி.பி.கஜேந்திரன் பம்மல் கே.சம்பந்தம், சீனா தானா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி உள்ளார். இவர் புகழ்பெற்ற திரைப்பட நடிகை டி.பி.முத்துலட்சுமி அவர்களின் மகன் ஆவார். குடும்பக் கதைகளை இயக்குவதில் கில்லாடி இயக்குனராக விளங்கிய விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தின் மூலம் டிபி கஜேந்திரன் ஏராளமான குடும்பக் கதையம்சம் கொண்ட படங்களையே இயக்கினார்.

44

நடிகர் டி.பி.கஜேந்திரன், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் ஆவார். கல்லூரி காலத்தில் இருந்தே இவர்கள் நட்புடன் பழகி வந்தனர். நண்பனின் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்த டி.பி.கஜேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...  டாப் கியரில் செல்லும் விஜய்... தடுமாறும் அஜித் - மற்றுமொரு இயக்குனரின் வருகையால் AK 62வில் நீடிக்கும் குழப்பம்

click me!

Recommended Stories