தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய்யும், அஜித்தும் அவர்களது படங்களான வாரிசு மற்றும் துணிவை கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு போட்டி போட்டு ரிலீஸ் செய்தனர். இரண்டு படங்களுக்கும் சமமான அளவு வரவேற்பு கிடைத்தாலும், வசூலில் இரண்டுமே சற்று தொய்வை சந்தித்தது. இதற்கு காரணம் இந்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது தான். ஒருவேளை தனியாக வெளியிடப்பட்டு இருந்தால் இரு படங்களும் வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது.