AjithKumar: பிறந்தநாளில் தங்க நிற மாடர்ன் உடையில் ஜொலித்த ஷாலினி அஜித்! கோட் - சூட்டில் கலக்கிய தல! போட்டோஸ்

First Published | Nov 20, 2021, 7:52 PM IST

இன்று தன்னுடைய 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஷாலினி அஜித் (Shalini Ajith)  தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரீசென்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் சரி, மீண்டும் ரசிக்கத் தோன்றும் டாப் நட்சத்திர ஜோடிகளில் தல அஜித் - ஷாலினி தம்பதிக்கு எப்போது தனி இடம் உண்டு.

தல அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.

Tap to resize

சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே 2002ல் அஜித், ஷாலினி திருமணம் செம்ம கிராண்டாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், அனோஷ்கா, ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து வருகிறார்.

தன்னுடைய குடும்பத்தின் மீது கேமரா வெளிச்சம் படுவதில் அஜித்துக்கு விருப்பம் இல்லை என்றாலும், தன்னுடைய ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்தால் அதை ஒரு போதும் மறுத்தது இல்லை.

சமீபத்தில் அஜித் தன்னுடைய குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது ஷாலினி அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.

இந்த ரீசென்ட் போட்டோ ஒன்றில் ஷாலினி தங்க நிற உடையிலும், மற்றொரு புகைப்படத்தில் கருப்பு நிற மாடர்ன் உடையிலும் உள்ளார். தல அஜித்தை பற்றி சொல்லவா வேண்டும்... வெள்ளை முடியுடன், கருப்பு நிற கோட் சூட்டில் வேற லெவலுக்கு கெத்து காட்டியுள்ளார்.

Latest Videos

click me!