Aditi Rao: பரவசமூட்டும் லோ நெக் ஜாக்கெட்டில்... பளீச் அழகில் போதையேற்றும் அதிதி ராவ்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published | Nov 20, 2021, 6:11 PM IST

பாலிவுட், கோலிவுட் என இரு மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் அதிதி ராவ், தற்போது... பட்டு ஜாக்கெட்டில் பரவசமூட்டும் அழகில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய நடிகையும், பாடகியுமான நடிகை அதிதி ராவ் இந்தி மற்றும் தமிழ் என இருமொழி  திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட், கோலிவுட் என இரு மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் அதிதி ராவ், தற்போது... பட்டு ஜாக்கெட்டில் பரவசமூட்டும் அழகில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Tap to resize

ஐதராபாத்தில் புகழ்பெற்ற அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். அக்பர் ஹைதாரி மற்றும் ஜே. ராமேஷ்வர் ராவினுடைய பேத்தி ஆவார்.

இவரின் முதல் திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த 'சிருங்காரம்' எனும் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏ சாலி சிந்தகி எனும் திரைப்படத்தில் சுதிர் மிஷ்ரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமடைந்தார். இந்தப் படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றார்.

2011 இல் வெளிவந்த ராக்ஸ்டார் மற்றும் 2013 இல் வெளிவந்த மர்டர்-3, பாஸ், என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாறு தொடர்பான 'பத்மாவத்' திரைப்படத்தில் அலாவுதீன் கில்சியின் மனைவியான மெஹ்ருனிசாக் கதாபாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகரீதியிலும் வணிக ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழில் நீட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இரண்டாவது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான செக்க சிவந்த வானம், மற்றும் சைக்கோ போன்ற படங்களில் நடித்தார்.

அதே போல் தற்போது ஹே சினாமிக்கா என்கிற படத்தில் நடித்து வரும் இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' படத்தில், தனுஷுடன் இணைந்து காத்தோடு காத்தானேன் பாடலையும் பாடியுள்ளார்.

மேலும் தெலுங்கு படம் ஒன்றும் இவரது கை வசம் உள்ளது. அவ்வப்போது எக்கசக்க அழகில் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டுவரும் இவர், தற்போது பட்டு நிற ஜாக்கெட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!